சென்னை சின்னப் போரூரைச் சேர்ந்தவர் அண்ணாமலை (47). இவர் வானகரம் சர்வீஸ் சாலைப் பகுதியில் உணவகம் நடத்திவருகிறார். இவரது கடையில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை, போதைப்பொருள்கள் விற்பனைசெய்யப்படுவதாக மதுரவாயல் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
![குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10766586_409_10766586_1614215187300.png)
இதையடுத்து மதுரவாயல் காவல் உதவி ஆய்வாளர் செல்லத்துரை தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் நேற்றிரவு (பிப். 24) இந்தக் கடையில் சோதனை செய்தனர். அப்போது தடைசெய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், புகையிலைப் பொருள்களை மறைத்துவைத்து விற்பனைசெய்தது தெரியவந்தது.
![குட்கா விற்ற நபர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-madhuravoyal-gutkaszised-photo-script-tn10022_24022021212028_2402f_1614181828_843.jpg)
இதையடுத்து அண்ணாமலையின் வீடு, கடையிலிருந்து சுமார் ஐந்தாயிரம் பாக்கெட் குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்களைக் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். மேலும் அண்ணாமலையை கைதுசெய்த காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: 'பஸ்ஸ நிறுத்துறியா! மல்லாக்க படுக்கவா!' - 'ஏய்' வடிவேலுவை மிஞ்சிய போதை ஆசாமி!