ETV Bharat / city

நீட் தேர்வு: சொற்ப எண்ணிக்கையிலான அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ள அவலம்!

நீட் தேர்வு எழுதுவதற்கு சொற்ப எண்ணிக்கையிலான அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author img

By

Published : Aug 6, 2021, 4:08 PM IST

Updated : Aug 6, 2021, 7:45 PM IST

நீட் தேர்வு
நீட் தேர்வு

சென்னை: அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் நீட் தேர்வினை எழுதுவதற்கு அரிதாகவே விண்ணப்பித்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சரியான முறையில் பயிற்சி அளிக்கப்படாததால், விண்ணப்பம் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளின் மாணவர்கள் சேர்வதற்கான தேசிய நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் எனவும், இதற்காக ஜூலை 13ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தேசியத் தேர்வு முகமை அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்து வருகின்றனர். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வினை எழுதுவதற்கு அவர்கள் படித்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது.

குறைவான மாணவர்கள் விண்ணப்பம்

இந்நிலையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி வரையில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆறாயிரத்து 412 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்பம் செய்வதற்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 505 பேரும், மிகக் குறைவாக திருப்பூர் மாவட்டத்தில் 11 பேரும் விண்ணப்பித்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் 133 மாணவர்களும், செங்கல்பட்டில் 86 மாணவர்களும், திருவள்ளுரில் 499 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர். அவற்றிலும் ஆதிதிராவிடர் அருந்ததியர், பழங்குடியின மாணவர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருப்பது தெரியவந்துள்ளது.

ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆயிரத்து 850 பேர், அருந்ததியர் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 129 பேர், பழங்குடியின மாணவர்கள் வெறும் 95 பேர் மட்டுமே விண்ணப்பித்திருப்பது தெரிய வந்துள்ளது. மீதம் இருக்கக்கூடிய நான்காயிரத்து 338 மாணவர்களும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, இதர இட ஒதுக்கீட்டுப் பிரிவினராக இருக்கின்றனர்.

பழங்குடியின மாணவர்களைப் பொருத்தவரை; அரியலூர், சென்னை, திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 16 மாவட்டங்களில் ஒரு மாணவர் கூட விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவு செய்த மாணவர்களின் விழுக்காடு விவரம்

  • மொத்தம் - ஆறாயிரத்து 412 பேர்
  • பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட உள்ளிட்ட மாணவர்கள் எண்ணிக்கை
    நான்காயிரத்து 338 பேர் (67 விழுக்காடு)
  • ஆதிதிராவிடர் மாணவர்கள் ஆயிரத்து 850 பேர் (28 விழுக்காடு)
  • அருந்ததியர் பிரிவு மாணவர்கள் 129 (2.01 விழுக்காடு)
  • பழங்குடியின மாணவர்கள் 95 (1.4 விழுக்காடு)
    விண்ணப்பம் செய்த மாணவர்களின் விவரங்கள்
    விண்ணப்பம் செய்த மாணவர்களின் விவரங்கள்

கடந்த ஆண்டில் தேர்வு எழுதியவர்கள் விபரம்

இதுவே கடந்த 2018-19 ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 19 ஆயிரத்து 680 பேர் பதிவு செய்தனர். நீட் தேர்வை 14 ஆயிரத்து 929 பேர் எழுதினர். தேர்ச்சிப் பெற்றவர்கள் இரண்டாயிரத்து 583 மாணவர்கள் ஆவர். ஆனால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒரு மாணவருக்கு மட்டுமே இடம் கிடைத்தது.

அதுவே கடந்த 2019-20 கல்வி ஆண்டில் கரோனா தொற்று காலத்திலும் எட்டாயிரத்து 132 மாணவர்கள் பதிவு செய்தனர். அவர்களில் ஆறாயிரத்து 692 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், ஆயிரத்து 633 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதால், 435 மாணவர்கள் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்ந்தனர்.

நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள்

நீட் தேர்வு விண்ணப்பம் குறைவு

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாந்தி கூறும்போது, “அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் நீட் தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பிக்கும் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது.

அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மூலம் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பொருளாதார சூழ்நிலை காரணமாக விண்ணப்பக் கட்டணம் செலுத்த முடியாத நிலை இருக்கலாம். அது போன்ற மாணவர்களைக் கண்டறிந்து விண்ணப்பம் செய்ய அரசு உதவிட வேண்டும்.

இந்தக் கல்வியாண்டில் புதியதாக 11 மருத்துவக் கல்லூரிகளில் ஆயிரத்து 650 இடங்கள் கூடுதலாக வரும் நிலை உள்ளது. எனவே மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கூடுதல் இடங்களில் மாணவர்கள் சேரும் வகையில் அவர்களை தயார் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

குறைவான மாணவர்களே விண்ணப்பம்

நேரடி பயிற்சி தேவை

மேலும், “கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றின் காரணமாக பள்ளிகளில் செயல்படாமல் ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. எனவே அரசுப் பள்ளியில் இருந்து நீட் தேர்வு எழுத விண்ணப்பம் செய்துள்ள மாணவர்களுக்கு கரோனா தொற்று குறைந்துள்ளதால், நேரடியாக ஒரு மாதம் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: நீட் ஆள்மாறாட்டம்: இடைத்தரகராக செயல்பட்ட ஒருவர் கைது!

Last Updated : Aug 6, 2021, 7:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.