சென்னை கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள முட்டுக்காடு பகுதியில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவரும் வாகனங்களை கண்காணிக்கவும், எண்களை துல்லியமாக பதிவு செய்யும் என்பிஆர் சிசிடிவி கேமராக்களுடன் கூடிய புறக்காவல் நிலையத்தை சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் திறந்துவைத்தார்.
அதைத் தொடர்ந்து நீலாங்கரை, சாய்பாபா கோயில், கோவிந்தன் நகர் வரையும் 79 சிசிடிவி கேமராக்கள் புதிதாகப் பொருத்தப்பட்டுள்ளன. சிசிடிவி கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்ட டெக்னிஷியன், காவலர்கள்,காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் என அனைவருக்கும் சென்னை கமிஷனர் விஸ்வநாதன் நினைவுப் பரிசினை வழங்கி, உணவு பரிமாறினார்.
![npr cctv camera starting function number plate reading cctv camera](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4269159_che-4-2.bmp)
இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ’ஜிடிக் காப் என்ற செயலி தொலைந்த பொருள்கள் உடனடியாக கிடைக்க உதவியாக இருக்கும். வெளிநாட்டில் சாலை விதிமுறைகளை கடைபிடிப்பதுபோல நம் நாட்டிலும் சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றச் சம்பவங்கள் 50 விழுக்காடு குறைந்துள்ளது. இதனால் தமிழ்நாடு காவல் துறைக்கு சிறந்த ஆளுமை விருது கிடைத்துள்ளது. இதையடுத்து, சிசிடிவி கேமராவை வைக்க உதவிய பொதுமக்களுக்கும், இதைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.