சென்னை: அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணனை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று(செப்.09) காலை நேரில் சென்று சந்தித்தார். மேலும் பினராயி விஜயன் இன்று மாலை வரை சென்னையில் தங்கியிருப்பார் எனத்தகவல் வெளியாகி உள்ளது.
புற்றுநோய்க்கான சிறப்பு சிகிச்சைக்காக கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி பாலகிருஷ்ணன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், பாலகிருஷ்ணன் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலாளரான கொடியேரி பாலகிருஷ்ணனுக்கு மருத்துவ நிபுணர்கள் குழு சிகிச்சை தொடர்ந்து சிகிச்சை அளித்தும் கண்காணித்தும் வருகிறது.
பாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவு காரணமாக கட்சியின் மாநிலச்செயலாளர் பதவியிலிருந்து சமீபத்தில் விலகினார். மேலும் திருவனந்தபுரத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளராக பாலகிருஷ்ணனுக்குப் பதிலாக, சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் எம்.வி. கோவிந்தன் நியமிக்கப்பட்டார்.
கடந்த வாரம் நியமிக்கப்பட்ட சபாநாயகர் ஏ.என்.ஷம்சீர் மற்றும் புதிதாகப் பதவியேற்ற அமைச்சர் எம்.பி. ராஜேஷ் ஆகியோர் கடந்த வாரம் பாலகிருஷ்ணனை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மின்சார வாகன தினம் - எலக்ட்ரிக் வாகனப்பேரணியை தொடங்கி வைத்த கோவை கலெக்டர்