ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.
இதில் தமிழ்நாட்டிலிருந்து பாய்மரப் படகு போட்டியில் நேத்ரா குமணன், வருண் எ.தக்கர், கே.சி.கணபதி, மேசைப் பந்து போட்டியில் ஜி.சத்தியன், எ.சரத் கமல், வாள் சண்டைப் போட்டியில் சி.ஏ.பவானி தேவி, பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் டி.மாரியப்பன் ஆகிய 7 பேர் பங்கேற்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
மேலும், இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரே மாநிலத்தில் இருந்து 5 பேர் தடகளப் போட்டியில் பங்கேற்கின்றனர்.
பதக்கம் வென்றால் கோடிக்கணக்கில் பரிசு அறிவிப்பு
அதன்படி ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலெட்சுமி சேகர், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோர் தடகளப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.3 கோடி, வெள்ளிப் பதக்கம் வென்றால் ரூ.2 கோடி, வெண்கலம் வென்றால் ரூ.1 கோடி பரிசு எனவும் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ரூ. 5 லட்சம் நிதிஉதவி அளிப்பு
அதில், “ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள உள்ள வீரர், வீராங்கணைகளுக்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் புதிய அத்தியாயம் இணைப்பு
இச்செயல் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்த தங்கப் பதக்கங்கள், அனைவருக்கும் கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்திருக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு உதவுவதில் திமுக ஆட்சி ஒரு புதிய அத்தியாயத்தை இணைத்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விரைவில் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியீடு - பழனிவேல் தியாகராஜன்