இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் நீதிமன்றத்திலிருந்து இதுவரை எனக்கு இருமுறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு தகுந்த விளக்கத்தை நானும் உரிய நேரத்தில் அளித்துள்ளேன். ஆனால் தற்போதுவரை என் மீது எந்தவித குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை.
எனது தந்தையின் கைது காங்கிரஸ் கட்சியை அச்சுறுத்துவதாகவும், மக்கள் மத்தியில் உள்ள நற்பெயரை கெடுக்கும் நோக்கிலும் உள்ளது. தந்தை கைது செய்யப்பட்டதற்கான சட்ட நடவடிக்கைகளை முடித்துவிட்டு, டெல்லியில் காஷ்மீர் விவகாரத்தைக் கண்டித்து திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ளேன் என்றார்.