ETV Bharat / city

கருவறையில் உருவாகி ஆய்வறையில் வளர்ந்த ஆண்டவர்!

கமல் ஹாசன் அரசியலுக்கு வந்துவிட்டார். அவரது அரசியல் பேச்சுகள் புதிதாக இருக்கின்றன என்று ஒருசாரார் கூறுகின்றனர். இல்லை அவர் தெளிவில்லாமல் பேசுகிறார் என்று மறுசாரார் கூறுகின்றனர். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அரசியல் என்னும் ஆசையோ, மேடையோ கமல்ஹாசன் என்ற மகா கலைஞனை விழுங்கிக் கொண்டிருக்கிறது.

கமல்ஹாசன்
author img

By

Published : Nov 7, 2019, 1:44 PM IST

Updated : Nov 7, 2019, 2:01 PM IST

கமல் ஹாசன். இந்த பெயரை இந்திய திரையுலகம் அவ்வளவு எளிதாக மறக்கக்கூடாது அப்படி மறந்தால்‘ மறதி ஒரு தேசிய வியாதி’ என்ற வசனம் பேசிய கமலை மீண்டும் மீண்டும் கொண்டாட வேண்டும். தமிழ் சினிமா தற்போது பல்வேறு பரிணாம வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கிறது அடைய இருக்கிறது. ஆனால் ’இதெற்கெல்லாம் வெத’ கமல் போட்டது.

கமல் ஹாசன்
கமல் ஹாசன்

பேசும் படம் என்று பெயர் வைத்து ஊமை படம் எடுக்கவும், ராஜபார்வை என்று தலைப்பு வைத்து கண் தெரியாதவராக நடிக்கவும் அவரால் மட்டும்தான் முடியும். கமல் கருவறையில் உருவானாரா இல்லை ஆய்வறையில் உருவானாரா என்பது தெரியாது. ஏனெனில் அவர் எடுக்கும் ஒவ்வொரு படமும் ஒரு சோதனை முயற்சியாகவே இருந்துவந்திருக்கிறது.

ஆண்டவர்
ஆண்டவர்

வளர்ந்த நடிகர் கமல் ஹாசன் அதிக சம்பளம் வாங்கிய காலக்கட்டத்தில் ஸ்டார் வேல்யூ உச்சத்தில் இருந்த சமயத்தில் (இப்போதும் ஸ்டார்தான்) வறுமையின் நிறம் சிவப்பு என்ற திரைப்படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதெல்லாம் சாதாரணமான விஷயம் கிடையாது. கே. பாலசந்தர் நினைத்ததை திரையில் அப்படியே கொண்டுவந்து அசத்தினார் கமல். முக்கியமாக, ஒரு நேர்காணல் காட்சியில் நீங்கள் கம்யூனிஸ்ட்டா என்று அதிகாரிகள் கேட்கும்போது கமல் ரௌத்திரம் பொங்க பேசிய வசனத்தில் கமலுக்குள் ஒரு காம்ரேட் வந்து நடித்துக் கொடுத்துச் சென்றிருப்பார். அவ்வளவு வீரியமான நடிப்பு அது.

உயரத்தில் இருக்கும் நடிகர் மேலும் உயரத்தில் செல்லவே ஆசைப்படுவார். ஆனால் கமல் மட்டும்தான் தனது உயரத்தைக் குறைத்துக்கொள்ள துணிந்தவர். அதுமட்டுமின்றி ஓரளவு சுமாராக இருக்கும் கதாநாயகர்களே மேக்கப் போட்டுக்கொண்டு தங்களை அழகாக காட்டிக்கொள்ள முயல்வார்கள். ஆனால் பிறவி அழகன், நிரந்தர இளைஞன் அந்த மேக்கப் கொண்டு தனது அழகை குறைத்துக்கொண்டவர். ஆம், தன் உயரத்தை குறைத்து, தன் அழகை சிதைத்து தமிழ் சினிமாவின் உயரத்தை அதிகமாக்கி அழகாக்கிய பேரழகன் கமல்.

ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவர்
ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவர்

தேவர் மகன் இன்றுவரை பலரால் விமர்சிக்கப்படும் திரைப்படம். அதில் அவர் சாதிய கருத்துகளை ஆழமாக வைத்திருக்கிறார். அது மறுக்க முடியாத உண்மை. ஏன் அவரே ஒத்துக்கொண்ட உண்மையும்கூட. ஆனால், அந்த திரைப்படத்தின் ஒரு காட்சியில் எதிர் தரப்பு வழக்கறிஞரிடம் ஆங்கிலத்தில் கமல் ஹாசன் பேசும் தொனி இன்றுவரை பிரமிக்க வைக்கும்.

பள்ளிப்படிப்பை தாண்டாத கமல் ஹாசனால் நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேச முடியும், சரியான உச்சரிப்போடு தமிழைப் பேச முடியும், மலையாளம் பேச முடியும், தெலுங்கு பேச முடியும், ஹிந்தி பேச முடியும். பாரதியார் எப்படி பன்மொழிப்புலமை பெற்றிருந்தாரோ அதுபோல் தற்போது கமல் ஹாசன் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

உலக நாயகன்
உலக நாயகன்

ஒருவர் பாடல் எழுதுவது வேறு, கவிதை எழுதுவது வேறு. பாடல் எழுத மெட்டுக்களுக்குள் வார்த்தைகளை வைக்க தெரிந்தால் போதும். ஆனால் கவிதை எழுத உயிருக்குள் வார்த்தைகளை வைக்கத் தெரிந்திருக்க வேண்டும். கமல் ஹாசன் கவிதைகளை உயிருக்குள் வைக்கத் தெரிந்தவர். கமலின் கவிதையில் எப்போதும் ஒரு ரௌத்திரம் மெலிதாக இழையோடும், காதல் பெரிதாக ஊஞ்சலாடும். குறிப்பாக, விருமாண்டி திரைப்படத்தில் அவர் எழுதிய 'உன்னைவிட' பாடலில்,
“வாக்கப்பட கிடைச்சான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவான்டி
காட்டு வழி காளைங்க கழுத்து மணி
கேட்கையில நமக்கு அது கோயில் மணி” என்ற வரிகள் கமல் ஹாசன் என்னும் கவிஞன் உயர நிற்கும் இடம்.

கமல்
கமல்

பொதுவாக ஒரே சம்பவத்தை இருவர் இரண்டு விதமாக சொல்வதை நாம் கேட்டிருப்போம். காலங்காலமாக சமூகத்தில் நடந்துவரும் இந்த முறையை தமிழ்த் திரையுலகில் எந்த இயக்குநரும் கண்டுகொள்ளாமல் கடந்துசென்றுவிட்டனர். ஆனால் அதனை கமல் ஹாசன் விருமாண்டி திரைப்படத்தில் பயன்படுத்தி வெற்றியும் பெற்றிருப்பார். முக்கியமாக, இந்தியத் திரையுலகில் முதன்முறையாக லைவ் சவுண்ட் ரெக்கார்டிங் முறையை அறிமுகப்படுத்தினார்.

அதுமட்டுமின்றி, ரிவெர்ஸ் மோடில் ஒரு பாடலை தமிழ் ரசிகர்கள் மன்மதன் அம்பு படம் வரும்வரைக் கண்டதில்லை. அதனை முதன்முதலில் தமிழ் ரசிகர்களுக்கு காட்சிப்படுத்தியவர் கமல்ஹாசன். இப்படி பல சோதனை முயற்சிகளை தொடர்ந்து செய்துகொண்டே இருந்தவர் கமல். (தற்போதுதான் அரசியலுக்கு வந்துவிட்டாரே).

அன்பே சிவம்
அன்பே சிவம்

அவரது திரைப்பயணத்தில் அன்பே சிவம் முக்கியமானது. அதில் அவரது நடிப்பும், அவரும், மதனும் சேர்ந்து எழுதிய வசனங்களும் பகுத்தறிவுவாதிகளுக்கும், ஆத்திகர்களுக்கும் இடையே நடந்துவரும் மோதலை சற்று சாந்தப்படுத்தும். தசாவதாரம் திரைப்படத்தில் வைணவ கதாபாத்திரத்தில் நடித்து சைவத்தை எதிர்த்த அதே கமல்தான், கடவுள் இல்லனு சொல்லல இருந்தா நல்லாருக்கும்னு சொல்றேன் என்றும் பேசியவர். இப்படி பல படங்களில், வசனங்களில் தனது கதாபாத்திரங்களுக்காக பச்சோந்தியாக தன்னை தகவமைத்துக்கொள்பவர் கமல் ஹாசன்.

கமல் ஹாசன் அரசியலுக்கு வந்துவிட்டார். அவரது அரசியல் பேச்சுகள் புதிதாக இருக்கின்றன என்று ஒருசாரார் கூறுகின்றனர். இல்லை அவர் தெளிவில்லாமல் பேசுகிறார் என்று மறுசாரார் கூறுகின்றனர். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அரசியல் என்னும் ஆசையோ, மேடையோ கமல்ஹாசன் என்ற மகா கலைஞனை, ஒரு சினிமா விஞ்ஞானியை விழுங்கிக் கொண்டிருக்கிறது.

கமல்
கமல்

ஒரு முறை பாரதிராஜா இப்படி சொன்னதாக ஞாபகம், “கமலை அரசியலுக்கு கூப்டாதிங்க அவன் எதையும் கத்துக்கிட்டுதான் செய்வான். அப்டி அவன் கத்துக்கிட்டு அரசியல் செஞ்சானா இங்க யாராலும் அரசியல் செய்ய முடியாது”.

ஆனால் இப்போது அப்படி பேசிய பாரதிராஜாவையும் காணவில்லை, கமல் கற்றுக்கொண்ட அரசியல் என்ன என்றும் தெரியவில்லை. கமலின் அரசியல் பாதை அவ்வளவு தெளிவாக ஒன்றும் இல்லை.

ஒரு சராசரி ரசிகனாக, சாமானியனாக ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவரிடம் ஒரு வேண்டுதல் என்னவென்றால், நீங்கள் மீண்டும் பழைய கமல் ஹாசனாக பல பரிசோதனை சினிமாக்களை செய்யுங்கள்... அரசியலா, சினிமாவா என முடிவெடுக்க வேண்டியது உங்கள் உரிமை. ஆனால் ஆண்டவரிடம் வேண்டுவது எங்களின் கடமை. ஏனெனில் நீங்கள் கருவறையில் உருவாகி ஆய்வறையில் வளர்ந்த ஆண்டவர்...

Intro:Body:

kamalhassan-birthday-SPL

Conclusion:
Last Updated : Nov 7, 2019, 2:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.