ETV Bharat / city

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு - AIADMK

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தாக்கல் செய்த மனுக்கள் மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை (ஆகஸ்ட் 17) தீர்ப்பளிக்க உள்ளது.

Judgment in the case related to AIADMK general meeting tomorrow

author img

By

Published : Aug 16, 2022, 9:56 PM IST

சென்னை: கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி 2 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டது.

அதன்படி வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அதற்கு எதிர்ப்புத்தெரிவித்து தலைமை நீதிபதிக்கு மனு அளிக்கப்பட்டது. இறுதியில் அந்த மனு திரும்பப் பெறப்பட்டதைத்தொடர்ந்து வழக்கில் புதிய நீதிபதியை நியமிக்க தலைமை நீதிபதிக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரைத்தார்.

பின்னர் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், கடந்த 10 மற்றும் 11ஆம் தேதிகள் விசாரணை நடத்தி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன், நாளை (ஆகஸ்ட் 17) தீர்ப்பளிக்க உள்ளார்.

இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் கைப்பற்றப்பட்ட கஞ்சா மதிப்பை வெளியிட தயாரா... அமைச்சர் மா சுப்பிரமணியன் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.