சென்னை: ராஜிவ் காந்தி மருத்துவமனையில் 2ஆவது டவர் பிளாக்கின் பின்புறத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் நோயாளிகள் பதற்றமடைந்தனர். இரண்டு ஆக்சிஜன் சிலிண்டர்களும் வெடித்ததால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
பின்னர் விபத்துக்குள்ளான கட்டிடத்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட நோயாளிகளை, தீயணைப்பு வீரர்கள் ஏணி மூலமாக மீட்டு கீழே கொண்டு வந்தனர். அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர்கள், தீயணைப்பு வீரர்களுக்கு துணையாக நோயாளிகளை கீழே இறக்க உதவி செய்தனர். செய்தி சேகரிக்கும் பணிக்கு வந்ததை மறந்து, அவர்கள் உதவி செய்தது பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து