சக்தி ஸ்டீல் குழுமத்தினர் சில வருடங்களாக போலி ஆவணங்கள் மூலம் வருமானத்தை குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்ததாக தெரியவந்துள்ளது. இதனால் தமிழ்நாடு, ஆந்திராவில் அந்நிறுவனத்திற்குச் சொந்தமான 35 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி சென்னை சூளைமேட்டில் உள்ள அலுவலகத்தில், சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக உரிமையாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள், வீடு அலுவலகங்களிலும் சோதனை மேற்கோண்டு வருகின்றனர். இரண்டு நாட்கள் தொடர்ந்து சோதனை நடைபெறும் என வருமானவரித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதில் இருந்து போலி பில்கள் மூலம் சுமார் 2,500 கோடி ரூபாய்க்கு மேல் இரும்பு கம்பி நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்தனர்.