ETV Bharat / city

பெட்ரோலுடன் 20 விழுக்காடு எத்தனால் கலக்கப்படும் - இந்தியன் ஆயில் - இயக்குனர் எஸ்.எஸ்.வி.ராமகுமார் செய்தியாளர் சந்திப்பு

பெட்ரோல், டீசலில் எத்தனால் கலப்பதால் எவ்வித இழப்பும் பயனாளருக்கு ஏற்படாது என இந்தியன் ஆயில் நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குனர் எஸ்.எஸ்.வி.ராமகுமார் தெரிவித்துள்ளார்.

இந்தியன் ஆயில்
இந்தியன் ஆயில்
author img

By

Published : Oct 6, 2021, 7:28 PM IST

சென்னை: இந்தியன் ஆயில் நிறுவன விரிவாக்கம் குறித்தும், மாற்று எரிசக்தி குறித்தும் இந்தியன் ஆயில் நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குனர் எஸ்.எஸ்.வி.ராமகுமார் இன்று (அக்.6) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், பெட்ரோல், டீசல் இவைகளோடு எத்தனால் கலப்பதால் எஞ்ஜின் செயல்பாட்டில் எந்த பாதிப்பும் ஏற்படாது. பெட்ரோல், டீசல் எஞ்ஜினில் எரியும் திறனோடு எத்தனால் சேர்ந்தால் அதிக அளவு ஆக்டான்ஸ் கிடைக்கும். எனவே பெட்ரோல் டீசலில் எத்தனால் கலப்பதால் எவ்வித இழப்பும் பயனாளருக்கு ஏற்படாது.

இந்தியன் ஆயில் செய்தியாளர் சந்திப்பு
இந்தியன் ஆயில் செய்தியாளர் சந்திப்பு

நாடு முழுவதும் விநியோக நிலையங்கள்

மேலும் தற்போது 10 விழுக்காடு அளவிற்கு பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படும் நிலையில், 2025 முதல் 20 விழுக்காடு எத்தனால் கலக்கப்படும். சிஎன்ஜி (CNG) வாயு தயாரிக்கும், விநியோகிக்கும் நிலையங்களை நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவனம் நிறுவவுள்ளது. இதன் மூலம் 5000 தொழில் முனைவோர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

இந்த சிஎன்ஜி(CNG) வாயுவுடன் ஹைட்ரஜன் வாயுவை கலப்பதால் அதி திறன் கொண்ட சிஎன்ஜி(CNG) வாயு கிடைப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் வந்துள்ளது.எனவே அவை உற்பத்தி செய்வது விநியோகம் செய்வது குறித்து பாதுகாப்பு நடவடிக்கைக்காக உச்ச நீதி மன்றத்தை அணுகியுள்ளோம். அதன் அனுமதி கிடைத்தவுடன் சிஎன்ஜி(CNG) வாயுவுடன் ஹைட்ரஜன் வாயு கலந்து விநியோகம் செய்யப்படும்.

பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல்

இறக்குமதியை நம்பி தான் இந்தியா

இந்தியாவில் 90 விழுக்காடு மக்கள் சமையல் எரிவாயுவை பயன்படுத்து கின்றனர். ஆனால் 50 விழுக்காடு குறைவான உற்பத்தி தான் இந்தியாவில் நடக்கிறது. எனவே இந்தியா, பெரும்பாலான எரிவாயுவிற்கு இறக்குமதியை நம்பி தான் உள்ளது. இதற்கு முன்பு சலுகை விலையில் சமையல் எரிவாயு (LPG) விநியோகம் செய்யப்பட்டது. தற்போது அரசின் கொள்கையின் படி, சர்வதேச சந்தை விலையை பொறுத்து விற்கப்படுகிறது. இதனால் விலை மாறுதல் ஏற்படுகிறது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிஎஸ்என்எல் நிர்வாக இயக்குனருக்கு எதிராக தொழிற்சங்கம் போர்க்கொடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.