ETV Bharat / city

வேலம்மாள் குழுமத்தில் அதிரடி சோதனை! - வேலம்மாள் குழுமம்

சென்னை: வேலம்மாள் கல்விக் குழுமத்திற்குச் சொந்தமான 50 இடங்களில் வருமான வரித் துறை அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர்.

raid
raid
author img

By

Published : Jan 21, 2020, 6:02 PM IST

சென்னை, மதுரையை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள், பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, நர்சிங் மற்றும் மருத்துவக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் வேலம்மாள் அறக்கட்டளையின் கீழ் இயங்கிவருகின்றன.

வேலம்மாள் கல்விக் குழுமத்தின் தலைவராக எம்.வி. முத்துராமலிங்கம் இருந்துவருகிறார். இந்தக் கல்வி குழுமங்களில் மாணவர் சேர்க்கையின்போது அதிக நன்கொடை வாங்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அவ்வாறு வாங்கப்பட்ட நன்கொடைகள், கணக்கில் காட்டப்படாமல் மறைக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித் துறை அலுவலர்களுக்குப் புகார் வந்ததையடுத்து, இன்று அதிரடி சோதனையில் இறங்கினர்.

சென்னை, மதுரை, தேனி, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்படும் கல்வி நிறுவனங்களிலும் வேலம்மாள் கல்விக் குழும நிர்வாக இயக்குநர்கள் வீடுகளிலும் வருமான வரிச் சோதனை நடைபெற்றுவருகிறது.

இந்தச் சோதனையானது இன்று காலை 10 மணியிலிருந்து தொடங்கி நடைபெற்றுவருகிறது. 200-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அலுவலர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இச்சோதனை இரண்டு நாள்கள் நடைபெறலாம் என வருமானவரித் துறை தரப்பில் கூறப்படுகிறது.

200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

சோதனை முடிந்த பின்னரே, நகை, பணம் ஏதேனும் பறிமுதல்செய்யப்பட்டுள்ளனவா என்பன குறித்து முழுமையாகத் தெரியுமென வருமானவரித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: "சதுரங்க வேட்டை" பட பாணியில் இயங்கும் எம்எல்எம் நிறுவனத்தில் ஜிஎஸ்டி அலுவலர்கள் சோதனை

Intro:Body:வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்

வேலம்மாள் கல்வி குழுமத்தின் தலைவர் எம்வி முத்துராமலிங்கம். சென்னை மற்றும் மதுரை யை அடிப்படையாக கொண்டு தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் பொறியியல் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, நர்சிங் மற்றும் மருத்துவ கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் வேலம்மாள் அறக்கட்டளை மூலமாக நடைபெற்று வருகிறது. இந்த கல்வி குழுமங்களில் மாணவர் சேர்க்கையின் போது அதிக நன்கொடை காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. வாங்கப்பட்ட நன்கொடைகள் கணக்கில் காட்டப்படாமல் இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்ததையடுத்து, அதிரடியாக சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.தமிழகத்தில் சென்னை மதுரை தேனி கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்படும் கல்வி நிறுவனங்களிலும்,வேலம்மாள் கல்வி குடும்பத்திற்கு தொடர்புடைய நிர்வாக இயக்குனர்கள் ஆகியோரது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையானது இன்று காலை 10 மணியில் இருந்து துவங்கி நடைபெற்று வருகிறது. 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வருமான வரி சோதனை எனது இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறலாம் என வருமான துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை முடிந்த பின்னரே சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட நகை அல்லது பணம் மற்றும் வருகை குறித்து முழுமையாக தெரிவிக்கப்படும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.