சென்னை: சென்னை ஐஐடியில் 1982-83ஆம் ஆண்டு காலக்கட்டத்திலிருந்து தொழில் முனைவோருக்கான எம் எஸ் படிப்பு வழங்கப்பட்டு வந்தது.
இடையில் நிறுத்தப்பட்ட இந்தப் படிப்பை தற்போது மீண்டும் தொடங்க சென்னை ஐஐடி திட்டமிட்டுள்ளது. தொழில்நுட்பத் துறைகளில் தொழில் முனைவோர் வாய்ப்புகளைக் கண்டறிவதற்கான வழிகாட்டுதலை இந்தப் படிப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படிப்புக்காக தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் வணிகமயமாக்கக்கூடிய யோசனைகள் குறித்து ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்றும், திறமையான தொழில்முனைவோரும், சுற்றுச்சூழல் தொடர்பான ஸ்டார்ட் அப் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் இணைந்து மாணவர்களை மேற்பார்வையிட்டு வழிகாட்டுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நவம்பர் 30ஆம் தேதி விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: PRS Shutdown: ஒரு வாரத்திற்கு ஆறு மணிநேரம் ரயில் முன்பதிவு செய்ய முடியாது... ஏன் தெரியுமா?