சென்னை: வடகிழக்குப் பருவமழையின்போது சென்னையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்குகிறது. இதற்குக் காரணம் மழைநீர் வடிகால் வாய்க்கால் முறையாகத் தூர்வாரப்படாமல் இருப்பது எனத் தெரியவந்துள்ளது.
இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் திருப்புகழ் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைத்து நிரந்தரத் தீர்வு காண தமிழ்நாடு அரசு முடிவுசெய்தது.
இது குறித்து ஆய்வுசெய்த இந்தக் குழு, தனது முதல்கட்ட அறிக்கையைத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இன்று (ஜனவரி 3) தாக்கல்செய்தது.
கடந்த நவம்பர் மாதம் 200 செமீ மழை பெய்ததாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்த நிலையில், 2015ஆம் ஆண்டைப் போலவே இந்த முறையும் பல பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சமூக நலன் - மகளிர் உரிமைத் துறையில் தேர்வுசெய்யப்பட்டோருக்கு பணிநியமன ஆணை வழங்கல்