ETV Bharat / city

காதல் மனைவியை கத்தியால் குத்திய கணவன் - ஒரு மாதத்திற்கு பின் ஆந்திராவில் சடலம் மீட்பு - சென்னை புழல் கதிர்வேடு பகுதி

காதல் கணவனால் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் ஆந்திராவில் ஒரு மாதத்திற்கு பின் மீட்கப்பட்டது.

காதலியை கத்தியால் குத்திய காதல் கணவன் - ஒரு மாதத்திற்குபின் சடலம் மீட்பு

author img

By

Published : Aug 2, 2022, 12:12 PM IST

சென்னை:சென்னை புழல் கதிர்வேடு பகுதியை சேர்ந்த மாணிக்கம் - பால்கிஸ் தம்பதிக்கு 18 வயதில் தமிழ்ச்செல்வி என்ற ஒரு மகள் உள்ளார். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன் பாடியநல்லூரை சேர்ந்த மதன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். பின்னர் பாடியநல்லூரில் மதனும், தமிழ்ச்செல்வியும் தனி வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் தமிழ்செல்வியின் பெற்றோர், அவரகளது மகளுக்கு போன் செய்தால் எடுக்கவில்லை எனவும், அங்கு வீட்டிற்கு சென்றபோது யாரும் இல்லாததால் தங்களது மகளை கண்டுபிடித்து தருமாறு செங்குன்றம் காவல் நிலையத்தில் பெண்ணின் தாய் பால்கிஸ் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக செங்குன்றம் காவல் துறையினர் இளம்பெண்ணின் கணவன் மதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது தமது மனைவியை ஆந்திர மாநிலம் கோனியா அருவிக்கு அழைத்து சென்று அங்கு ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தியதாக மதன் தெரிவித்துள்ளார். செங்குன்றம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து ஆந்திராவிற்கு சென்றபோதும் அங்கு காணாமல் போன தமிழ்செல்வியின் சடலம் கிடைக்கவில்லை. மேலும் தடயங்கள் ஏதும் கிடைக்காததால் காவல்துறையினர் காணாமல் போன பெண் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்த முடியாமல் திணறி வந்தனர்.

காதலியை கத்தியால் குத்திய காதல் கணவன் - ஒரு மாதத்திற்குபின் சடலம் மீட்பு

இதற்கிடையே பெண்ணின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களது பெண்ணை கண்டுபிடித்து தருமாறு ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெகதீஷ் சந்திரா அமர்வு காணாமல் போன பெண்ணை உடனடியாக கண்டுபிடித்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு செங்குன்றம் காவல் உதவி ஆணையருக்கு உத்தரவிட்டது.

தொடர்ந்து நீர் விழ்ச்சி அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் மதன் தமது காதல் மனைவி தமிழ்செல்வியை நீர் வீழ்ச்சிக்கு அழைத்து சென்றதும், திரும்பி வரும்போது தனியாக வந்ததையும் உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து கைலாச கோனா நீர் வீழ்ச்சி அருகே அழுகிய நிலையில் சுடிதார் அணிந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.

இதனையடுத்து காணாமல் போன தமிழ்ச்செல்வியின் பெற்றோரை அழைத்து சென்று செங்குன்றம் காவல்துறையினர் சடலத்தை அடையாளம் கண்டுள்ளனர். மேலும் கொலை நடந்தது ஆந்திர மாநில எல்லை என்பதால் ன் மதனை செங்குன்றம் போலீசார் ஆந்திர போலீசில் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க:மாரியம்மன் கோவில் திருவிழா - கூழ் அண்டாவில் தவறி விழுந்த பக்தர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.