ETV Bharat / city

சென்னை ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் ஆட்டோ தொழிலாளிக்கு இருதய அறுவை சிகிச்சை - அரசு பொது மருத்துவமனை

சென்னை: கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆட்டோ தொழிலாளர் மகேந்திரனுக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையில் வெற்றிகரமாக இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

transplantation
transplantation
author img

By

Published : Jan 21, 2020, 1:35 PM IST

கோயம்புத்தூர் காந்திபுரத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். 39 வயதான இவருக்கு சிறுவயதிலிருந்தே இருதய பாதிப்பு இருந்துள்ளது. இதனையடுத்து ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் மகேந்திரன் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில், கடந்த ஜனவரி 5ஆம் தேதி சாலை விபத்தில் மூளைச்சாவடைந்த 27 வயதானவரின் இருதயம் தானமாகப் பெறப்பட்டு இவருக்கு பொருத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை முதல்வர் ஜெயந்தி கூறும்போது, ”கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மகேந்திரன் இருதய நோயால் பாதிக்கப்பட்டு, 2019 ஜனவரி 29ஆம் தேதிமுதல் இருதய அறுவை சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

அவருக்கு இருதயத்தில் உள்ள அனைத்து வால்வுகளும் பழுதடைந்து செயலிழந்ததால், இருதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வு என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இந்நிலையில், சாலை விபத்தில் மூளைச்சாவடைந்த ஒருவரின் இருதயம், இரண்டு சிறுநீரகம், கல்லீரல், எலும்புகள் அவரின் குடும்ப உறுப்பினரின் அனுமதியுடன் ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் தானமாகப் பெறப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, இருதயவியல் துறை இயக்குநர் ஜோசப் ராஜ், மயக்க மருந்தியல் துறை பேராசிரியர் வெள்ளியங்கிரி ஆகியோர் தலைமையில், ஐந்து மணிநேரம் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, இருதயம் பொருத்தப்பட்டது. தற்போது மகேந்திரன் நலமாக உள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு முதன்முதலில் செய்யப்பட்ட வெற்றிகரமான இருதய மாற்று அறுவை சிகிச்சை இதுவாகும்“ எனத் தெரிவித்தார்.

5 மணிநேரம் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, இதயம் பொருத்தப்பட்டது

இதையும் படிங்க: சென்னை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருவர் உயிரிழப்பு

Intro:சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில்
ஆட்டோ தொழிலாளிக்கு இருதய அறுவை சிகிச்சை

Body:சென்னை,

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆட்டோ தொழிலாளி மகேந்திரனுக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையில் வெற்றிகரமாக இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 39 வயதானவர் மகேந்திரன். இவருக்கு சிறுவயது முதலே இருதயத்தில் பாதிப்பு இருந்துள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டபோது கோயம்புத்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு பரிந்துரை வழங்கியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மகேந்திரன் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் ஜனவரி 5ஆம் தேதி சாலை விபத்தால் மூளைச்சாவடைந்த 27 வயதானவரின் இருதயம் தானமாக பெறப்பட்டு இவருக்கு பொருத்தப்பட்டுள்ளது.தற்போது நன்றாக உள்ளார்.

இதுகுறித்து சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்வர் ஜெயந்தி கூறியதாவது, கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மகேந்திரன் இருதய நோயால் பாதிக்கப்பட்டு 2019 ஜனவரி 29-ஆம் தேதி முதல் இருதய அறுவை சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இருதயத்தில் உள்ள அனைத்து வால்வுகளும் பழுதடைந்து இருதயம் செயல் இழந்ததால் இருதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வு என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்த நிலையில் ஜனவரி 5ஆம் தேதி மாலை சாலைவிபத்தில் 27 வயது மதிக்கத்தக்க ஒருவரின் இருதயம், இரண்டு சிறுநீரகம், கல்லீரல் மற்றும் எலும்புகள் அவரின் குடும்ப உறுப்பினரின் அனுமதியுடன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜனவரி 5ம் தேதி நள்ளிரவு இருதயவியல் துறை இயக்குனர் ஜோசப் ராஜ் மற்றும் மயக்க மருந்தியல் துறை பேராசிரியர் வெள்ளிங்கிரி ஆகியோர் தலைமையில் 5 மணிநேரம் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருதயம் பொருத்தப்பட்டது. தற்போது நலமாக உள்ளார்.

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் முக்கியமாக மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பெறப்பட்டது என்பது சிறப்பாகும்.

2020ஆம் ஆண்டு முதன்முதலில் செய்யப்பட்ட வெற்றிகரமான இருதய மாற்று அறுவைச் சிகிச்சையாகும். இதுவரை 11 இருதய மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது.

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் சிறுநீரகம் கல்லீரல் ஆகியவையும் வேறு நோயாளிகளுக்கும் பொருத்தப்பட்டுள்ளன. எழும்பு தானமாக பெறப்பட்டு எறும்பு சேமிப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.