அரசு ஊழியர்கள் இரண்டாம் திருமணம் விவகாரம் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை! - அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம்
அரசு ஊழியர்கள் மனைவி/கணவர் உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணம் புரிந்தால் அது தண்டனைக்குரிய குற்றம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை: இந்திய தண்டணை சட்டம் 494 படி அரசு ஊழியர்கள் முதல் நபர் உயிருடன் இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை செயல்படுத்தும் விதமாக அரசு ஊழியர்களில் முதலில் திருமணம் செய்த கணவனோ, மனைவியோ உயிருடன் இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்தால் அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவ்வாறு திருமணம் செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மேலும் ஓய்வூதிய பலன்களை தடையின்றி பெற, குடும்ப விவரத்தை அரசு ஊழியர்கள் சமர்ப்பித்திட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க:புதுக்கோட்டையில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்டப்படும் - அமைச்சர் முத்துசாமி