ETV Bharat / city

'தமிழ்நாட்டில் மருத்துவம் சுற்றுலாவுக்கான இடமாக மாறிவருகிறது' - பட்டமளிப்பு விழா

சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவம் சுற்றுலாவிற்கான இடமாக மாறிவருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புகழாரம் சூட்டியுள்ளார்.

Governor banwarilal speech
author img

By

Published : Jun 5, 2019, 8:46 AM IST

சென்னை அடுத்த பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை கல்லூரியில் 13ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு 669 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய ஆளுநர், அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறி, பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் கூறினார். பின் தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு சமூக மாற்றத்திலும், பொருளாதாரத்திலும் முன்னேற்றத்தை கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக மருத்துவ சேவையில் கிராமப்புறங்களில் 58 விழுக்காடு தனியார், 22 விழுக்காடு அரசு மருத்துவமனைகளும், நகர்ப்புறங்களில் 32 விழுக்காடு அரசு மருத்துவமனைகளும் செயல்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், இதனால் உள், வெளி மாவட்டங்களிலும் வந்து இங்கு பயன் பெறுகின்றனர், ஆகையால் தமிழ்நாடு மருத்துவ சுற்றுலாவுக்கான இடமாக மாறிவருகிறது என புகழாரம் சூட்டினார்.

மருத்துவத் துறையை பொறுத்தமட்டில் தமிழ்நாட்டில் நோயாளிகள் மன நிறைவு, மருத்துவ வேலைவாய்ப்பு தகுந்த நேரத்தில் மருத்துவ உதவி என அனைத்தும் முறையாக கிடைக்கப்பெறுகிறது என தெரிவித்தார்.

பட்டம்பெற்று மருத்துவ சேவை செய்யக்கூடிய மருத்துவர்கள் தனித்திறமையுடன் கூடிய மனிதநேய தன்மையுடனும் நடந்துகொள்ள வேண்டுமென அறிவுரை வழங்கினார்.

'தமிழ்நாட்டில் மருத்துவம் சுற்றுலாவுக்கான இடமாக மாறிவருகிறது'-பன்வாரிலால்

மருத்துவ சுற்றுலாவிற்கான இடமாக தமிழகம் மாறிவருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு.

சென்னை அடுத்த பூந்தமலியில் உள்ள தனியார் கல்லூரியில் 13ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இதற்க்கு சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டார்.நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் மருத்துவ துறையில் பல்கலைக்கழக அளவில் முதல் இடங்களை   பெற்ற 5 மாணவர்களும்  தங்கப்பதக்கமும் பெற்ற 6 என 11மாணவர்கள் உள்பட 669 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

இதனை தொடர்ந்து பேசிய ஆளுநர் அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை துவங்கினார் ஆளுனர் பன்வாரிலால் புரோகித். பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறினார் பின்னர் பேசிய அவர் தமிழகம் சமூக மாற்றத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றத்தை கண்டுள்ளது.குறிப்பாக தமிழகம் மருத்துவ சுற்றுலா இடமாக உள்ளது.மருத்துவ சேவையில் கிராமபுறங்களில் 58 சதவிகிதம் தனியார் மற்றும் 22 சதவிகிதம் அரசு மருத்துவ மனைகளும்செயல்படுகின்றன.நகர்ப்புறங்களில் 32சதவிகிதம் அரசு மருத்துவமனைகளும் 58 சதவிகிதம் தனியார் மருத்துவ நிறுவனங்களும் ஈடுபடுகின்றன.

மத்திய அரசின் அயூஷமான் பாரத் திட்டதில் 5லட்சம் ரூபைக்கான  மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது இதன்மூலம் அனைத்து மக்களுக்கும் இந்தியாவில் 50கோடி மக்கள் பயன்பெற்றுள்ளனர்.மருத்துவ துறை பொறுத்தமட்டில் தமிழகத்தில் நோயாளிகள் மன நிறைவு,மருத்துவ வேலைவாய்ப்பு தகுந்த நேரத்தில் மருத்துவ உதவி என அனைத்தும் முறையாக கிடைக்கப்பெருகிறது.பட்டம் பெற்று மருத்துவ சேவை செய்யக்கூடிய மருத்துவர்கள் தனித்திறமையுடன் கூடிய மனிதநேய தன்மையுடனும் நடந்துகொள்ள வேண்டுமென அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர் மருத்துவர்கள்  நோயாளிகளிடம் சிரித்த முகத்துடன் பேசினாலே அவர்கள் 50 சதவீதம் சரி ஆகி விடுகின்றனர்.எனவே இன்முகத்துடன் நோயாளிகளை கவனித்து மருத்துவ சேவையை வழங்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தார்.அனைத்து விதமான மருத்துவ துறைகளும் இணைந்து செயல் பட்டு பொது எதிரியான நோய்களை ஒழிக்க வேண்டும்.முடிவில் நன்றி வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை முடித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.