ETV Bharat / city

நெல் கொள்முதல் விலையை 3,000 ரூபாயாக உயர்த்த ராமதாஸ் கோரிக்கை - ராமதாஸ்

சென்னை: நெல் கொள்முதல் விலையை 3,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்.

ramadoss
ramadoss
author img

By

Published : Jun 2, 2020, 6:37 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் பிரதமர் தலைமையில் நேற்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சாதாரண வகை நெல்லுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை 53 ரூபாய் உயர்த்தப்பட்டு, 1,868 ரூபாயாகவும், சன்ன ரக நெல்லுக்கான கொள்முதல் விலை 53 ரூபாய் உயர்த்தப்பட்டு, 1,888 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மிகமிகக் குறைவான இந்த விலை உயர்வு, உழவர்களின் துயரங்களை எந்த வகையிலும் தீர்க்காது.

2019-20ஆம் ஆண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கான உற்பத்திச் செலவு 1,782.21 ரூபாயாகும். 2020-21ஆம் ஆண்டில் நெல் சாகுபடி செலவு ஐந்து விழுக்காடு உயர்வதாக வைத்துக்கொண்டால், நடப்பாண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கான உற்பத்திச் செலவு 1,871.32 ரூபாயாக இருக்கும்.

அத்துடன், 50 விழுக்காடு லாபம் 935.66 ரூபாய் சேர்த்து, ஒரு குவிண்டால் நெல்லுக்கான கொள்முதல் விலையாக 2,806.98 ரூபாய் நிர்ணயிக்கப்படுவதுதான் நியாயமானதாக இருக்கும். இதில் எப்படி 50 விழுக்காடு லாபம் கிடைக்கும் என மத்திய அரசு கூறுகிறது என்பது தெரியவில்லை.

ஆண்டுக்கு ஆண்டு அனைத்து இடுபொருள்களும் கடுமையாக விலை உயர்ந்துவரும் நிலையில், அதன் சுமையை உழவர்கள்தான் தாங்க வேண்டியுள்ளது. ஆனால், உழவர்களின் உற்பத்திப் பொருள்களுக்கு மட்டும் உரிய விலை ஒருபோதும் கிடைப்பதில்லை.

உலகில் எந்தத் தொழில் பிரிவினருக்கும் இவ்வளவு குறைவாக வருவாய் உயர்வு அறிவிக்கப்படுவதில்லை. எனவே, இந்த அநீதி சரிசெய்யப்பட்டு, குறைந்தது குவிண்டாலுக்கு 3,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட வேண்டும். அதற்கு மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: தென்மேற்குப் பருவமழை: தமிழ்நாட்டில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.