ETV Bharat / city

800 அரசு மருத்துவர்களை பணிவரன்முறை செய்க - மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை - சென்னை மாவட்ட செய்திகள்

அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதால் 800 அரசு மருத்துவர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு அரசு சேவை மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

800 அரசு மருத்துவர்களக்கு பணிவரன்முறை
800 அரசு மருத்துவர்களக்கு பணிவரன்முறை
author img

By

Published : Apr 13, 2022, 2:52 PM IST

சென்னை: அரசு சேவை மருத்துவர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் ஜி.சுரேஷ் கூறியதாவது, "தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் 800க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் பணிவரன்முறை செய்யப்படவில்லை. இதனால், முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட ஊதியத்துடன் கூடிய 365 நாள் மகப்பேறு விடுப்பு பெற முடியாமல், ஓர் ஆண்டுக்கு மேல் பணியாற்றியுள்ள பல பெண் மருத்துவர்களுக்கு விடுப்பு நிராகரிக்கப்படுகிறது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் போது, அதன் பிறகு 5 ஆண்டுகள் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் அடிப்படை ஊதியம் மட்டுமே பெற்று மக்களுக்காக மொத்தம் 7 ஆண்டுகள் சேவை செய்த போதும், முதுநிலை மற்றும் உயர் சிறப்பு படிப்புகளில் எங்களுக்கு இடஒதுக்கீடு இல்லை.

நாங்கள் பல ஆண்டுகளாக உயர்படிப்பில் சேர காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. பணியில் சேர்ந்து இதுவரை எங்களுக்கு எந்த ஒரு வருடாந்திர ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை. வெறும் அடிப்படை ஊதியம் மட்டுமே பெறுகிறோம். பணிமூப்பினை இழந்து வருகிறோம்.

அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட்டு பல்வேறு சூழ்நிலைகளில் நாங்கள் இருந்த போதிலும், கரோனா பெருந்தொற்றின் போது எங்கள் சேவையில் எந்த ஒரு தொய்வும் காட்டாமல் தமிழ்நாடு அரசுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறோம். எங்களுடைய சேவையை கருதில் கொண்டு பணிவரன்முறை செய்து துயரினை தீர்க்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'மு.க. ஸ்டாலின் நல்லாட்சி நடத்திவருகிறார்'- துரை வைகோ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.