துபாயிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று(செப்.18) காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அலுவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச்சேர்ந்த ஒரு ஆண் பயணி மீது சுங்க அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அந்த பயணியை நிறுத்தி அவருடைய உடைமைகளை சோதித்தனர். உடைமைகளில் எதுவும் இல்லை. இதை அடுத்து அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக சோதித்தனர். அப்போது அவருடைய உள்ளாடைகளில் மறைத்து வைத்திருந்த சிறிய பார்சலைக் கைப்பற்றினர்.
அதில் தங்க பசை இருந்ததைக் கண்டுபிடித்தனர். அத்தோடு அவருடைய பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த, தங்க செயின் ஒன்றையும் கைப்பற்றினர். அவரிடம் இருந்து தங்க பசை மற்றும் தங்கச் செயின் என மொத்தம் 823 கிராம் தங்கத்தை சுங்க அலுவலர்கள் கைப்பற்றினர்.
அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 36.32 லட்சம். இதையடுத்து சுங்க அலுவலர்கள் அவரைக் கைது செய்து, விசாரணை நடத்துகின்றனர்.
இதையும் படிங்க: வீட்டின் பூட்டை உடைத்து 92 சவரன் தங்க நகைகள் கொள்ளை - ஒருவர் கைது