ETV Bharat / city

சரக்கு வாகன தணிக்கை மூலம் ரூ.5.81 கோடி வரை அபராதம் வசூல் - ஜோதி நிர்மலாசாமி - சென்னை மாவட்ட செய்திகள்

தமிழ்நாட்டில், நவம்பர் 25 முதல் 28ஆம் தேதி வரையில் (E-way) இ-வே பில் இல்லாமல் பயணித்ததற்காக, ரூ.5.81 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகம்
சென்னை தலைமை செயலகம்
author img

By

Published : Dec 4, 2021, 11:14 AM IST

சென்னை: தமிழ்நாடு வணிகவரித் துறைச் செயலர் ஜோதி நிர்மலாசாமி நேற்று (டிசம்பர் 3) செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சரக்கு வாகன தணிக்கை - ரூ.5.81 கோடி அபராதம்

"தமிழ்நாட்டில் கடந்த ஐந்து வாரங்களில் வணிகவரித் துறை மேற்கொண்ட சரக்கு வாகனத் தணிக்கையில் (E-way) இ-வே பில் இல்லாமல் பயணித்ததற்காக, ரூ.5.81 கோடி அபராதம் வசூல்செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று வணிகவரித் துறை மூலம் வசூலிக்கப்படும் வரி வருவாய் தொகைகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களுக்குத் தமிழ்நாடு அரசு செயல்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இவ்வாறு அரசுக்குச் சேர வேண்டிய வரி வருவாய் உரிய காலத்தில் பெறப்படுவதை உறுதி செய்யும்விதத்தில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

வணிகவரித் துறையின் புலனாய்வு சார்ந்த நடவடிக்கைகளை மேலும் வலுவாக்குவது, ரோந்துப் பணிக் குழுக்களைக் கொண்டு பட்டியல் இல்லாமல் செல்லும் வாகனங்களைத் தணிக்கை செய்யும் பணியினைத் திறம்படச் செய்வது போன்ற புதிய பல முயற்சிகள் வணிகவரித் துறையால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

சென்னை தலைமை செயலகம்
சென்னை தலைமைச் செயலகம்

மின்னணு வழிப்பட்டியல்கள் சரிபார்ப்பு

இதன்படி, கடந்த நவம்பர் 25 முதல் 28ஆம் தேதிவரை, முடிவடைந்த ஐந்து வார காலகட்டத்தில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வணிகவரி நுண்ணறிவுப் பிரிவு அலுவலகங்கள் மூலமாக 53 ஆயிரத்து 55 இடங்களில், சரக்கு வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவற்றில் 66 ஆயிரத்து 372 இ-வே பில் எனப்படும் மின்னணு வழிப்பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டு பில்கள் இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்கள் மீது ஆயிரத்து 54 இடங்களில் குற்றங்கள் பதிவுசெய்யப்பட்டு வரி அபராதமாக ரூ.5.81 கோடி வசூல்செய்யப்பட்டுள்ளது.

அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய், எவ்வித ஏய்ப்புகளுமின்றி வசூல்செய்யப்படுவதை உறுதிசெய்யும் வகையில் இத்தகைய வாகனத் தணிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்" என வணிகவரித் துறைச் செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களை குடியிருப்புகளிலிருந்து வெளியேற்ற தடை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.