ETV Bharat / city

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி - காவலர் அருங்காட்சியகம் திறந்துவைப்பு

அக்டோபர் 1ஆம் தேதிமுதல் அரசுப் பள்ளி மாணாக்கருக்கு அருங்காட்சியகத்தைப் பார்வையிடுவதற்கு அனுமதி கட்டணம் இல்லை. காவலர் அருங்காட்சியகத்தை இந்த மாதம் 30ஆம் தேதிவரை பொதுமக்கள் பார்வையிட இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

காவலர் அருங்காட்சியகத்தை திறந்துவைத்த ஸ்டாலின்

author img

By

Published : Sep 28, 2021, 2:10 PM IST

சென்னை: எழும்பூரில் உள்ள காவல் அருங்காட்சியகத்தை இன்று (செப்டம்பர் 28) முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்துவைத்தார். பொதுமக்கள் இந்த மாதம் 30ஆம் தேதிவரை இலவசமாகப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள பாரம்பரியம் மிக்க பழைய காவல் ஆணையரக கட்டடம் ஆறு கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் காவல் அருங்காட்சியகம் 24,000 சதுர அடி பரப்பளவில் இரண்டு தளங்களாக அமைக்கப்பட்டுள்ளது.

இக்காவல் அருங்காட்சியகத்தில், கூடுதல் வசதிகளாக கண்காணிப்பு கேமரா, தீத்தடுப்புச் சாதனங்கள், குடிநீர் வசதி, மழை நீர் சேகரிப்பு வசதி, சிற்றுண்டியகம், நுழைவுச் சீட்டு வழங்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

காவலர் அருங்காட்சியகத்தை திறந்துவைத்த ஸ்டாலின்
காவலர் அருங்காட்சியகத்தை திறந்துவைத்த ஸ்டாலின்

இந்த அருங்காட்சியகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை திறந்துவைத்துள்ளார். அப்போது அவருடன் காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு இருந்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி

இந்தக் அருங்காட்சியகத்தைக் காணவரும் அரசுப் பள்ளி மாணாக்கர், தனியார் பள்ளி - கல்லூரி மாணாக்கர், பொதுமக்கள் அனைவரும் நாளை மறுநாள் வரை (செப்டம்பர் 30) எவ்விதக் கட்டணமுமின்றிப் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், அக்டோபர் 1ஆம் தேதிமுதல் அருங்காட்சியகத்தைப் பார்வையிட வரும் அரசுப் பள்ளி மாணாக்கருக்கு அனுமதி கட்டணம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வரலாற்றைப் பறைசாற்றும் அருங்காட்சியகம்: திறந்துவைத்த ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.