ETV Bharat / city

ஜெயலலிதா மட்டும் தோற்றிருந்தால்?... அன்வர் ராஜா பேச்சு - etvbharat

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா தோற்றிருந்தால் 300க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்திருப்பார்கள் என அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா கூறியுள்ளார்

ஜெயலலிதா தேர்தலில் தோற்றிருந்தால் 300-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்திருப்பார்கள்

author img

By

Published : Jul 27, 2021, 2:52 PM IST

ராமநாதபுரம்: பரமக்குடியில் தனியார் மஹாலில் அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா, மாவட்ட செயலாளர் முனியசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் எம்.பி அன்வர், "ஒன்றிய செயலாளர்கள், கழக நிர்வாகிகளை தவிர்த்து கிராமத்திலுள்ள பொதுமக்கள் தேர்தல் நேரத்தில் எதிர்பார்ப்பது, ஜெயலலிதா பெயரை சொல்கிறார்களா? ர் எம்ஜிஆர் பெயரை சொல்கிறார்களா? என்பதைத்தான்.

ஜெயலலிதா இருந்தபோது..

நீங்கள் அந்தப் பெயர்களை மறைத்தால் அவர்கள் உங்களை மறைத்துவிடுவார்கள். இந்தத் தேர்தலில் பல இடங்களில் அதுதான் நடந்துள்ளது. என்னிடம் ஓர் மூத்த அமைச்சர் சொன்னார், இந்தத் தேர்தலில் 75 இடங்களில் வெற்றிபெற்றுவிட்டோம். ஜெயலலிதா இருந்தபோதும் நாம் தோற்றிருக்கிறோம். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது 65 இடங்களில் வெற்றிபெற்று எதிர்க்கட்சியாக இருந்தோம் என்று. அதற்கு அவரிடம் நான் சொன்னேன், ஜெயலலிதா சிறைக்கு சென்றபோது 200 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

அவர் உயிருடன் இருந்து இத்தேர்தலில் 75 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று முதலமைச்சர் பதவியை இழந்திருந்தால் 300க்கும் மேற்பட்ட கட்சியினர் தற்கொலை செய்துகொண்டிருப்பார்கள்.

ஆனால் இத்தேர்தலில் தோல்வியுற்று ஆட்சிக்கு வரமுடியவில்லை. இதுகுறித்து யாரும் வருத்தப்படவில்லை. யாரும் தூக்கிட்டு செத்து இருக்கிறாரா என்று கேட்டேன்?" என பேசினார்.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்- மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனை!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.