ETV Bharat / city

மோடியே வந்தாலும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தை தடுக்க முடியாது - மு.க.ஸ்டாலின் - People's Village Council Meeting

விழுப்புரம் : மோடியே வந்தாலும், திமுக நடத்திவரும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தை தடுக்க முடியாதென திமுக தலைவரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Even Modi will not be able to stop the village council meeting - MK Stalin
மோடியே வந்தாலும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தை தடுக்க முடியாது - மு.க.ஸ்டாலின்
author img

By

Published : Dec 25, 2020, 8:49 PM IST

எதிர்வரும் 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற பெயரில் திமுக தேர்தல் பரப்புரையை கடந்த 20ஆம் தேதியன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இந்த பரப்புரையில் தமிழ்நாடு முழுவதுமுள்ள 16 ஆயிரத்து 500 கிராம சபைகள் - வார்டுகளில் திமுக மாவட்ட, மாநகரச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்., ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் நிர்வாகிகள் என 1704 திமுக நிர்வாகிகள் இணைந்துள்ளனர். அந்த கூட்டங்களில் அதிமுகவுக்கு எதிராக 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற தீர்மானத்தை நிறைவேற்றி வருகின்றனர்.

அரசியல் கட்சிகள் கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு நேற்று தடை விதித்தது. இதனையடுத்து, கிராம சபை கூட்டம் இனி 'மக்கள் கிராமசபைக் கூட்டம்' என்ற பெயரில் நடத்தப்படும் என அறிவித்த திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.

அந்த வகையில், 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' பரப்புரையின் மூன்றாம் நாளான இன்று (டிச.25) விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேருந்து நிலையம் அருகில் நடத்தப்பட்ட மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

ஊர் பொதுமக்கள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின், "கிராம சபைக் கூட்டத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி மிரண்டு போய் உள்ளார். அதை தடை செய்துள்ளார். சீப்பை ஒளித்தால் கல்யாணம் நின்றுவிடும் என்ற நகைச்சுவையைப் போல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தை நிறுத்தினால் மக்கள் மனம் மாறிவிடும் என நினைக்கின்றார். குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்று கிராம சபைக் கூட்டத்தை நிறுத்த காவல்துறையினரை வைத்து பிரச்னை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

திமுக எந்தவொரு பிரச்னைக்கும் போகாது. அதனால் தான் கிராம சபைக் கூட்டத்தை மக்கள் கிராம சபைக் கூட்டமாக நடத்துகின்றோம். அமைதியாக நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பெயரை மாற்றிக் கூட்டத்தை நடத்துகிறோமே ஒழிய பயந்தல்ல.

இந்த ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதற்காகத் தான் மக்களை நேரில் சந்திக்கின்றோம். திமுக ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை மக்கள் முகத்தில் தெரிகின்றது. அதிமுகவை நிராகரிக்கின்றோம் என 18 லட்சத்துக்கும் மேலானவர்கள் தங்களது கருத்தைப் பதிவு செய்துள்ளார்கள். மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் இதுவரை 35 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.

இணையவழி உள்ளிட்டவை ஊடாக 2 கோடிக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதை பொருத்துக்கொள்ள முடியாமல் தான் மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு அரசு தடை விதித்துள்ளது. மோடியே வந்தாலும் இந்த மக்கள் கிராம சபை கூட்டத்தை தடுக்க இயலாது.

குடும்ப கட்சி என்ற குறைச் சொல்கின்றார்கள். குடும்பத்தை கட்சியோடு இணைத்து பாடுபடுகின்றேன். நான் நேரிடையாக அரசியலுக்கு வரவில்லை. கடைநிலை ஊழியனாக சிறுவயதில் கட்சியில் இணைந்து, கட்சிக்காக உழைத்து அதன்வழியாக தான் பதவிக்கு வந்துள்ளேன்.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மக்கள் கிராமசபைக் கூட்டம்

எதிர்கட்சியாக திமுக இருந்தாலும், மக்கள் திமுகவை ஆளுங்கட்சியாகத் தான் பார்க்கின்றார்கள். திமுக மீது மக்களுக்கு அதித நம்பிக்கை உள்ளது. 30 நாள்களாக டில்லியில் போராடும் விவசாயிகளை அழைத்து மோடி இதுவரை அழைத்து பேசவில்லை. வேளாண் சட்டத்தை நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் எதிர்க்கும் நிலையில் தமிழக அரசு மட்டுமே ஆதரித்து வருகின்றது. விவாயிகளை பற்றி கவலைப்படாத ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீன் பிடித்தொழிலுக்கு உரிமம் வழங்கப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க : நாமக்கல் மலைக்கோட்டை கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.