- வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு தண்டனை அறிவிக்கப்படுகிறது!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு இன்று(ஆக.31) உச்ச நீதிமன்றம் தண்டனை அறிவிக்க இருக்கிறது.
![பிரசாந்த் பூஷண்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8620779_bhusan.png)
- வைகை அணையில் இன்றிலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு!
தேனி வைகை அணையில் இன்றிலிருந்து(ஆக.31) 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
![வைகை அணை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8620779_vaikai.jpg)
- ஓணம் பண்டிகையை முன்னிட்டு மூன்று மாவட்டங்களுக்கு விடுமுறை! மலையாள மொழி பேசும் மக்கள் கொண்டாடும் திருவோணம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
![ஓணம் பண்டிகை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8620779_onam.jpeg)
- வங்கிக் கடன் தவணை கால அவகாசம் முடிவு!
கரோனா வைரஸால் ஊரடங்கு காரணமாக ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு, கடன் தவணையை செலுத்தும் கால அவகாசத்தை 6 மாதங்கள் நீட்டித்தது. அந்தக் கால அவகாசம் இன்றுடன் (ஆக.31) முடிவடைகிறது.
![ரிசர்வ் வங்கி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8620779_rbi.gif)
- புதிய கல்விக்கொள்கை குறித்து ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்க இன்று கடைசி நாள்!
புதிய கல்விக்கொள்கை குறித்து ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன் கால அவகாசம் இன்றுடன்(ஆக.31) முடிவடைகிறது.
![புதிய கல்விக்கொள்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8620779_nep.jpg)