ETV Bharat / city

காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM

author img

By

Published : Aug 7, 2021, 9:08 AM IST

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

காலை 9 மணி செய்திச் சுருக்கம்
காலை 9 மணி செய்திச் சுருக்கம்

காதல் விவகாரம்: பெண்ணை பிளேடால் கீறி கொலை முயற்சியில் ஈடுபட்டவரிடம் விசாரணை

காதல் விவகாரம் காரணமாக துணிக்கடையில் வேலை பார்க்கும் பெண்ணை பிளேடால் கீறிய நபரை அக்கம்பக்கத்தினர் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ஆவணங்களைக் கொண்டுவரச் சொன்ன கிராம உதவியாளரை காலில் விழவைத்த கொடுமை!

கிராம உதவியாளர் உள்ளூர் பிரமுகர் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எம்.சி. சம்பத்துக்கு துரோகம் செய்யவில்லை - அய்யனார் சாமி மீது அதிமுக பொறுப்பாளர் சத்தியம்

முன்னாள் அமைச்சருக்கு நான் துரோகம் செய்யவில்லை என அதிமுக பொறுப்பாளர் கந்தன் அய்யனார் சாமி மீது சத்தியம் செய்யும் காணொலி வைரலாகிவருகிறது.

ஃபாஸ்ட் புட் கடையில் தீ விபத்து: புரோட்டா மாஸ்டர் உள்பட 5 பேர் காயம்

கோடம்பாக்கத்தில் எரிவாயு கசிவு காரணமாக ஃபாஸ்ட் புட் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நான்கு ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.

அரசு மதுபான கடைக்கு எதிராகப் பெண்கள் திடீர் போராட்டம்

சுங்குவார்சத்திரம் அருகே புதியதாகத் திறக்கப்பட்ட அரசு மதுபான கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Exclusive: ஏரிகளைச் சீரமைக்கும் பணிகளின் நிலை என்ன?

வடகிழக்குப் பருவமழையால் சென்னை புறநகர்ப் பகுதிகளிலுள்ள ஏரிகள் நிரம்பி வெள்ள இடர் ஏற்பட்டுவருவதால் ஏரிகளைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

பொன்னேரியில் ரயிலை மறித்து போராட்டம் - சேவை பாதிப்பு

சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில்கள் குறித்த நேரத்தில் இயக்க வலியுறுத்தி ரயில் பயணிகள் போராட்டம் நடத்தியதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

'நீட்டில் அரசுப்பள்ளி மாணவர்களை அதிகரிக்க அரசின் நடவடிக்கை அவசியம்'

அரசுப்பள்ளி மாணாக்கர் நீட் தேர்விற்கு குறைந்த அளவில் விண்ணப்பித்திருப்பது கவலை அளிப்பதாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் இரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின விழா பணிகள் தொடக்கம்!

புதுச்சேரியில் 75ஆவது சுதந்திர தின விழாவானது கடற்கரை சாலையில் நடத்தப்படவுள்ளதால், பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கின.

நிதிநிலை சீரானதும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் - அமைச்சர் பேச்சு

நிதி நிலைமையைச் சரிசெய்த பின் திமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.