ETV Bharat / state

தமிழகத்தில் இருந்து கூடுதல் விமானங்களை இயக்க ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திட்டம்! - AIR INDIA EXPRESS

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தனது குளிர் கால அட்டவணையில் வாராந்திர விமானங்களின் எண்ணிக்கை 107 லிருந்து 140 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

விமானம் கோப்புப் படம்
விமானம் கோப்புப் படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2024, 3:16 PM IST

சென்னை: சென்னையில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் ஒரு வாரத்திற்கு இதுவரையில் 101 விமானங்கள், 11 உள்நாட்டு நகரங்களையும், 3 சர்வதேச நாடுகளுக்கும் தினசரி விமானங்களாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த குளிர்கால அட்டவணையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் கூடுதலாக விமான சேவைகளை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது," அகர்தலா, அயோத்தி, டெல்லி, இம்பால், இந்தூர், கண்ணூர், கோழிக்கோடு, லக்னோ, மங்களூர், மும்பை, ராஞ்சி, ஸ்ரீ நகர், அந்தமான், சூரத், வாரணாசி, விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய 17 உள்நாட்டு பெரு நகரங்களுக்கும், அபுதாபி, துபாய், மற்றும் சார்ஜா ஆகிய சர்வதேச நாடுகளுக்கும் நேரடி மற்றும் இணைப்பு விமானங்களையும் கூடுதலாக இயக்க இருக்கிறது.

இதையும் படிங்க: தேசிய முந்திரி தினம்: இதன் சிறப்பைக் காட்சிப்படுத்திய கண்கவர் ட்ரோன் காட்சி!

அதைப்போல் மதுரை, திருச்சி விமான நிலையங்களில் இருந்தும், உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்கள் குளிர்கால அட்டவணையில் கூடுதலாக இயக்கப்பட இருப்பதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.