சேலம்: பள்ளி மாணவ, மாணவிகள் இணைந்து, சேலம் அரசு மருத்துவமனை சுற்றுச்சுவரில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பொதுமக்களை கவரும் வண்ணம் பல வண்ணங்களை கொண்டு விழிப்புணர்வு ஓவியம்வரைந்துள்ளனர்.
சேலம் அரசு மருத்துவமனை, சேலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. மாவட்ட ஆட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள மருத்துவமனை சுவரில், அரசியல், தனியார் நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினரால் பல தரப்பட்ட போஸ்டர்களை ஒட்டி விளம்பரப்படுத்துவது தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இது அப்பகுதி வழியாக செல்பவர்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் இருந்துள்ளது.
இதையும் படிங்க: "எடப்பாடிக்கு உள்ள தகுதி எனக்கு கிடையாது" - உதயநிதி ஸ்டாலின் சூசகம்!
மருத்துவமனையின் நோக்கம் சிதறடிக்கப்பட்டு வந்த நிலையில், பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் அமைப்பினர் ஒன்றிணைந்து அரசு மருத்துவமனை சுவரை மீட்கும் நடவடிக்கையில் இன்று, ஞாயிற்றுக்கிழமை (நவ.24) ஈடுபட்டுள்ளனர். அதன்படி, முன்னதாக சுவரில் ஒட்டப்பட்டிருந்த தேவையற்ற விளம்பர போஸ்டர்களை அகற்றி, சுவருக்கு வண்ணம் அடித்துள்ளனர்.
பின்னர், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்விதவிதமான வண்ண ஓவியங்களை வரைந்துள்ளனர். அதில், சமூக பார்வையில் சுற்றுச்சூழல், மருத்துவம், விபத்தினால் ஏற்படும் அவலங்கள், குடும்ப கட்டுப்பாடு, சுய மருத்துவம் தவிர்த்தல், மரம் வெட்டுதலை தவிர்த்தல், மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டக்கூடாது, 18 வயதிற்கு உடபட்டவர்கள் இருசக்கர வாகன் ஓட்டக்கூடாது, தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டக்கூடாது போன்ற கருத்துமிக்க ஓவியங்கள் வரைந்து அதற்கு வண்ணம் தீட்டியுள்ளனர். பல்வேறு வண்ணங்களால் வரையப்பட்ட ஓவியங்களை பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்