ETV Bharat / state

நாட்டில் நயன்தாரா - தனுஷ் சண்டைதான் பெரிய பிரச்னையா? - KMDK ER ESWARAN

கொ.ம.தே.க-வின் கொள்கை ஒரு ஆக்கப்பூர்வமான அரசியல் கொண்டது. நயன்தாரா தனுஷ் சண்டை போன்ற தேவையில்லாத விவாதத்தை மக்கள் பெரிதாக பார்க்க கூடாது என அக்கட்சியின் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

கொமதேக கோவை பொதுசெயலாளர் ஈஸ்வரன்
கொமதேக கோவை பொதுசெயலாளர் ஈஸ்வரன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2024, 2:38 PM IST

கோயம்புத்தூர்: கோவை அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் (கொ.ம.தே.க) கோவை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று சனிகிழமை (நவ.23) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுசெயலாளர் ஈஸ்வரன், “அரசியல் களத்தை இன்று திராவிட அரசியல், தமிழ் தேசிய அரசியல், ஆன்மீக அரசியல் என பிரித்து கூறிகின்றனர். அந்த வகையில்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் அரசியல் ஆக்கப்பூர்வமான அரசியல். அனைத்து திட்டங்களையும் மக்களை சென்று சேர வைப்பது தான் இந்த ஆக்கப்பூர்வமான அரசியல். மக்களுக்கு வேண்டிய சேவைகளை செய்து கொடுப்பதுதான் நேர்மையான அரசியல். தமிழக அரசு, பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க தயங்க கூடாது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அவர்கள் கள் இறக்க அரசு அனுமதிக்க வேண்டும். அதேபோல் சொத்தவரியால் பொதுமக்கள் பெரிதளவு பாதிக்கப்படுகிறார்கள். அதை அரசு குறைக்க வேண்டும். கோவை மாநகராட்சி மிகப்பெரிதாக விரிவடைந்து கொண்டிருப்பதால் அதை இரண்டாக பிரிக்க வேண்டும்.

கொமதேக கோவை பொதுசெயலாளர் ஈஸ்வரன் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

ஆனைமலை - நல்லாறு திட்டத்தை கேரள அரசுடன் பேசி, விரைந்து அமல்படுத்த வேண்டும். இன்று நயன்தாராவுக்கும் - தனுஷுக்கும் அல்லது ஏ.ஆர்.ரகுமானுக்கும் அவரது மனைவிக்கும் நடக்கும் சண்டை தான் பெரிய பிரச்சனையா? அவர்களது பிஸ்னஸூக்காக நயன்தாராவும் - தனுஷும் சண்டை போட்டுக்கொள்கிறார். ஆனால் நாம் அதை தேவையில்லாமல் விவாதித்து கொண்டு இருக்கிறோம். ஒரு தூய்மையான அரசியல் எங்களிடம் உள்ளது” என்றார்.

இதையும் படிங்க: ஐஎஸ்பி கல்வி நிறுவனத்துக்கு ரூ.30 கோடி நன்கொடை அளித்த ராமோஜி அறக்கட்டளை!

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை அரசு விரைந்து கொண்டு வர வேண்டும். நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய்யை வழங்க வேண்டும். தேர்தல் முடிந்து ஆட்சி காலத்தில் பேச்சுகாக, தலைப்பு செய்தியில் வர வேண்டும் என நினைத்து சிலர் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என கூறி வலம் வருகின்றனர். அவர்கள் ஆக்கப்பூர்வமாக பேச வேண்டும்.

விஜய் கட்சி ஆரம்பித்ததையடுத்து நாம் தமிழர் கட்சியில் சில மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதில் ஒன்று தான் ரஜினி-சீமானின் சந்திப்பு. திமுக கூட்டணியிலிருந்து விலக வேண்டிய சூழல் தங்களுக்கு இல்லை,” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.