பெர்த்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் கடந்த 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் முறையே இந்திய அணி 150 ரன்களிலும், ஆஸ்திரேலியா 104 ரன்களிலும் ஆல் அவுட்டானது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி விளையாடியது.
அபராமாக விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஜோடி யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் முதல் விக்கெட்டுக்கு 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலியா மண்ணில் புது சாதனை படைத்தனர். அபாரமாக விளையாடிய கே.எல். ராகுல் 77 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
Hello Australia 🇦🇺
— BCCI (@BCCI) November 24, 2024
KING KOHLI has brought up his 7th Test century on Aussie soil and second at the Perth Stadium. A classic knock from the champion batter 🫡🫡
Live - https://t.co/gTqS3UPruo… #AUSvIND | @imVkohli pic.twitter.com/QHMm7vrhcw
மறுமுனையில் சிறப்பாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய மண்ணி தனது கன்னி சதத்தை விளாசினார். ஒரு புறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. அதிரடி காட்டி வந்த ஜெய்ஸ்வால் இறுதியில் 161 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனிடையே களமிறங்கிய விராட் கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன் கணக்கை சீரான இடைவெளியில் உயர்த்தினார்.
மறுமுனையில் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் (1 ரன்), துருவ் ஜூரல் (1 ரன்) சொறப் ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனிடையே கூட்டணி அமைத்த நிதிஷ் ரெட்டி, நிலைத்து நின்று விளையாடி விராட் கோலிக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் நீண்ட நாட்களுக்கு பின் விராட் கோலி தனது டெஸ்ட் செஞ்சூரியை பதிவு செய்தார்.
விராட் கோலியின் சதத்துடன் இந்திய அணி டிக்ளேர் செய்தது. அபாரமாக விளையாடிய விராட் கோலி 143 பந்துகளில் சதம் விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 27 இன்னிங்ஸ்களில் 7 சதம் விளாசிய விராட் கோலி, சச்சின் தெண்டுல்கரின் முந்தைய சாதனையை முறியடித்தார்.
Test Century No.30!
— BCCI (@BCCI) November 24, 2024
All hail, King Kohli 🫡👏👌
Live - https://t.co/gTqS3UPruo…… #AUSvIND pic.twitter.com/VkPr1YKYoR
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சச்சின் தெண்டுல்கர் 6 சதங்கள் அடித்ததே ஒரு இந்திய வீரரின் அதிகபட்ச சதங்களின் எண்ணிக்கையாக இருந்த நிலையில், தற்போது அதை விராட் கோலி முறியடித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த வீரர் என்ற சிறப்பையும் விராட் கோலி பெற்றார்.
இங்கிலாந்து முன்னாள் வீரர் வேலி ஹம்மண்ட்டுடன் (35 இன்னிங்ஸ்) இணைந்து விராட் கோலி சாதனையை பகிர்ந்து கொண்டார். இந்த சதம் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியின் 30வது சதமாகும். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசியவர்களின் பட்டியலில் டான் பிராட்மன் சாதனையை விராட் கோலி சமன் செய்தார்.
இதையும் படிங்க: அன்று எதிராளி. இன்று பயிற்சியாளர்... அரசியலில் மட்டுமல்ல... விளையாட்டிலும் இது சகஜம்!