- 25 விழுக்காடு இடஒதுக்கீடு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 25 விழுக்காடு இடஒதுக்கீட்டில் சேர இன்று (செப்.25) கடைசி நாள் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
- போக்குவரத்துத் துறை வேலைவாய்ப்பு மோசடி வழக்கு இன்று(செப்.25) விசாரணை
2011 முதல் 2015ஆம் ஆண்டு வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த தற்போதைய திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி, பதவி காலத்தில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாகக்கூறி, மோசடியில் ஈடுபட்டதாக வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் தன்னை விடுக்க மறுத்த உத்தரவை எதிர்த்து மனுதாக்கல் செய்தார். அதுகுறித்தான வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
- தர்மபுரி கனிம வள வழக்கு இன்று(செப்.25) விசாரணை
தர்மபுரி மாவட்டத்தில் கனிம வளங்களை எடுப்பதற்கான ஏல அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
- பி.ஆர்க் படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் இட ஒதுக்கீடு வழக்கு
பி.ஆர்க் படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 15 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக 2 வாரங்களில் அறிவிப்பாணை வெளியிட அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
- இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர்கள் பெயர் வெளியீட்டு வழக்கு
இந்து சமய அறநிலையத்துறையில் அறங்காவலர்கள் பெயரை ஏன் வெளியிடக்கூடாது எனக் கோரி தொடரப்பட்ட வழக்கில் இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.
- ரேஷன் கடைகளில் விற்பனை இயந்திரத்தை மாற்றி வழங்குவது காரணமாக விநியோக தேதி மாற்றம்
ரேஷன் கடைகளில் விற்பனை இயந்திரத்தை மாற்றுவது காரணமாக, செப்டம்பர் 25, 26ஆம் தேதிகளில் வழங்கவிருந்த பொருள்கள் வரும் 28,29ஆம் தேதிகளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 5 நாள்கள் ஆன்லைன் வகுப்புகள் நிறுத்திவைப்பு: இன்றுடன் முடிவடைகிறது
செப்டம்பர் 21 முதல் 25ஆம் தேதிவரை 5 நாள்கள் ஆன்லைன் வகுப்புகள் நிறுத்திவைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் நாளையோ அல்லது வரும் திங்கள் கிழமை முதலோ ஆன்லைன் வகுப்புகள் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.