ETV Bharat / city

எண்ணூர் பகுதியில் சுகாதாரமற்ற சூழலில் வாழும் மக்கள் - எண்ணூர் செய்திகள்

ஆலைகள் வெளியேற்றும் கழிவுகளால் குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியம், சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக எண்ணூர் பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

எண்ணூர் பகுதியில் ஆரோக்கியமற்ற சூழலில் வாழும் மக்கள்

author img

By

Published : Aug 25, 2021, 6:14 AM IST

சென்னை: எண்ணூர் பகுதியைச் சேர்ந்த மூன்று கிராமங்களில் வாழும் 16 பேரிடம் தர அடிப்படையிலான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழில் மையமான எண்ணூரில் மனிதர்களுக்கு ஆரோக்கியப் பிரச்சினை நிலவுகிறது என்பதை இந்த ஆய்வின் அறிக்கையில் கூறப்படுகிறது.

சென்னை அருகேயுள்ள எண்ணூர், மிக அதிக உயிர்ச்சூழல், பொருளாதார நிலைத்தன்மையுடையதாக இருந்ததையும், பின்னர் ஏற்பட்ட தொழில் வளர்ச்சி கொண்டுவந்த ஆலைகளின் காரணமாக அப்பகுதி, சென்னையின் நச்சுக் குவியல் பகுதியாக ஆகியிருப்பதையும் உள்ளூர் மக்கள் அளித்த சாட்சியங்கள் காட்டுகின்றன.

ஹெல்த்தி எனர்​ஜி இனிஷியேட்டிவ் (Healthy Energy Initiative – India) என்ற அமைப்பினைச் சார்ந்தவர்கள் ஒரு ஆய்வறிக்கையை மேற்கொண்டனர்.

அதில், எண்ணூர் பகுதியில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் நடந்துவரும் தொழில் துறை நடவடிக்கைகளின் காரணமாக, அவற்றுக்கு மிக அருகே வாழ்ந்துவரும் மக்களின் ஆரோக்கியம், சுற்றுச்சூழல், வாழ்க்கையின் தரம், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் சொல்லப்படுகிறது.

கட்டடக்காடாக மாறிய பகுதிகள்

உள்ளூர் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. மக்களின் ஆரோக்கியம், பிராந்திய சுற்றுச்சூழலின் நிலை, மக்களுக்கு கிடைக்கக் கூடிய சுகாதார சேவைகள் மீது ஆய்வு கவனம் குவித்தது.

வங்கக் கடலுக்குள் கொசத்தலையாறு-ஆரணி ஆறு கலக்கும் இயற்கை எழில் கொஞ்சும் கழிவெளியில் அமைந்த கிராமங்களாக காட்டுக்குப்பம், காட்டுப்பள்ளி குப்பம், உர்ணாம்பேடு என்ற மூன்று கிராமங்களும் இருந்தன.

ஆலைகள் வெளியேற்றும் கழிவுகளால் மக்கள் பாதிப்பு

இந்தக் கழிவெளியிலிருந்துதான் நீர், வங்கக் கடலுக்குள் நுழையும். இப்போது இப்பகுதி முழுவதும் ஆலைகளின் 'கட்டடக்காடாக' ஆகிவிட்டது. ஆலைகள் வெளியேற்றும் கழிவுகளால் காற்றும், நீரும், நிலமும், மக்களின் நல்வாழ்வும் சிதைந்துகொண்டிருக்கின்றன.

பகுதி மக்களின் நிலை

இச்சூழல் குறித்து காட்டுக்குப்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறியபோது, "ஆலைகளிலிருந்து வரும் தூசு, துகள்கள் எங்கள் வீட்டில் நுழைந்துவிடும். மாடியில் துணியைக் காயப்போட்டால், தூசு அவற்றில் ஒட்டிக்கொள்ளும். தீபாவளி வெடியில் பளபளவென்று இருக்கும் துகள்கள் போலத் துணியில் ஒட்டிக்கொண்ட துகள்கள் இருக்கும்" என்றார்.

மேலும், அப்பகுதியைச் சேர்ந்த மற்றொருவர், "ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, மருத்துவக் கழிவுகளை பக்கிங்ஹாம் கால்வாயில் சமீபத்தில் கொட்டிவிட்டது. மீன்பிடித்துக்கொண்டிருந்த குடியிருப்பாளர் ஒருவரின் காலில் ஊசி ஒன்று குத்திவிட்டது. அவர் காலில் மிகக் கடுமையான தொற்று ஏற்பட்டது. கடைசியில் காலை வெட்டியெடுக்கும்படி ஆனது" எனத் தெரிவித்தார்.

காட்டுப்பள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சொன்னபோது, “எல் அண்ட் டி துறைமுகம் அமைக்கப்படும் வரையில் சுறா, வஞ்சிரம், மாவலசி போன்ற மீன்கள் இங்கே கிடைத்தன. ஆனால், இப்போது இந்த மீன்களை அடையாளத்துக்குக்கூட பார்க்க முடியவில்லை" எனக் கூறினார்.

அபாயகரமான சூழல்

தொடர்ந்து ஹெல்தி எனர்ஜி இனிஷியேடிவ் ஒருங்கிணைப்பாளர் பூஜா குமார் பேசுகையில், "சுற்றுச்சூழல் நிலைத்தன்மையும், மனித ஆரோக்கியமும் மிகவும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டவை என்பதை கோவிட்-19 பெருந்தொற்று காட்டியுள்ளது.

நமது சமூகத்தில் உள்ள சமத்துவமற்ற நிலையையும், மிகவும் எளிய மக்களை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பாதிப்புக்கு ஆளாக்குவதையும் நமது கண்ணுக்கு முன்பு வெளிப்படுத்தியுள்ளது.

தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் மாசுபாடு, மோசமான காற்று, நீரின் தரம், அவற்றுடன் அபாயகரமான சூழலில் வாழும் எண்ணூர் பகுதி குடியிருப்பாளர்கள் போன்றவர்களுக்கான வாழ்க்கையின் பாதிப்புக்கு ஆளாகும் நிலையை, பெருந்தொற்று மேலும் அதிகப்படுத்தியுள்ளது" எனக் கூறினார்.

ஆய்வறிக்கை

குடியிருப்பாளர்களின் ஆரோக்கிய நிலையை மேம்படுத்துவதற்காகவும், பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளைத் தணிக்கவும் பரிந்துரைகளை ஆய்வறிக்கை அளித்துள்ளது. அதன்படி,

  • எண்ணூர் கழிவெளியை முழுமையாக மீட்டெடுத்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும், நீரின் காரணமாகப் பரவும் நோய்களைக் குறைக்க வேண்டும்.
  • தொழிற்சாலைப் பேரழிவுகள் ஏதும் ஏற்பட்டால், அதனைக் கையாளும் அளவுக்கும், சுற்றுச்சூழல் மாசுபாட்டால் ஏற்படும் தாக்கங்களைக் கையாளும் அளவுக்கும் எண்ணூரில் உள்ள சுகாதாரக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும்.
  • ஆலைகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, ஆலைகளின் காற்று, திரவ மாசுபாடுகளை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • பள்ளிக்குச் செல்வது, மருத்துவமனை செல்வது போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு ஏற்ற வகையில், பொதுப்போக்குவரத்துக் கட்டமைப்பை முன்னேற்ற வேண்டும்.
  • பகுதியைச் சுற்றியுள்ள ஆலைகளில் உள்ளூர்வாசிகளுக்கு நிரந்தரமான வேலையளிக்க வேண்டும். உள்ளூர்வாசிகளுக்கு ஏற்பட்ட பாரம்பரிய வாழ்வாதார இழப்புக்காக இழப்பீடு வழங்க வேண்டும்.
  • எண்ணூர் ஆற்றுக்குள்ளும், குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகேயும் திடக்கழிவுகளைக் கொட்டுவதும், சுத்திகரிப்பு செய்யப்படாத கழிவுநீரை வெளியேற்றுவதையும் நிறுத்த வேண்டும்.

என இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ''மாநகராட்சி ஆகிறது தாம்பரம்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.