ETV Bharat / city

'இன்றிலிருந்து 3ஆவது நாளில் உண்மைகள் உயிர்த்து எழப்போவது உறுதி' - ராமதாஸின் ஈஸ்டர் வாழ்த்து - PMK founder Ramdas wishes Easter

தமிழ்நாட்டிலும்கூட நயவஞ்சகர்களால் சிலுவையில் ஏற்றப்பட்ட உண்மைகள் இன்றிலிருந்து மூன்றாவது நாளில் உயிர்த்து எழப்போவது உறுதி என பாமக நிறுவனர் ராமதாஸ் தான் வெளியிட்டுள்ள ஈஸ்டர் திருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் வாழ்த்தில் ராமதாஸ் சூசகம்
ஈஸ்டர் வாழ்த்தில் ராமதாஸ் சூசகம்
author img

By

Published : Apr 3, 2021, 12:12 PM IST

பாமக நிறுவனர் ராமதாஸ் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "அன்பு, கருணை, மன்னிக்கும் மனப்பக்குவம் உள்ளிட்டவற்றைப் போதித்தவரான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடும் கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நேரமுண்டு என்று எல்லாவற்றிற்கும் ஒரு காலம் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற விவிலிய வாக்குத்தத்தத்தின்படி குறித்துவைக்கப்பட்ட நேரத்தில், முக்கியமாகக் குறித்த காரியம் நடைபெற்றே தீர வேண்டும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் அருளப்பட்டிருக்கிறது. அதன்படி, அனைத்து மக்களுக்கும், அனைத்து நன்மைகளும் நடக்க வேண்டிய நேரத்தில் நிச்சயமாக நடந்தே தீரும் என்பது உறுதி.

தமிழ்நாட்டிலும்கூட நயவஞ்சகர்களால் சிலுவையில் ஏற்றப்பட்ட உண்மைகள் இன்றிலிருந்து மூன்றாவது நாளில் உயிர்த்து எழப்போவது உறுதி. ஆனால், அவ்வாறு உயிர்த்தெழும் உண்மை, தம்மை சிலுவையில் அறைந்த தீமைகளையும், தீயவர்களையும் மன்னிக்காது. மாறாக, அவற்றைச் சிலுவையிலேற்றி தண்டித்து அதன்மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மைகளும், நல்ல காலமும் தொடர்வதை உறுதிசெய்யும்.

தமிழ்நாடு என்றால் வளர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றின் அடையாளமாகப் பார்க்கப்பட வேண்டும். தமிழ்நாட்டு மக்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர வேண்டும். அதை உறுதிசெய்ய இயேசுபிரான் உயிர்த்தெழுந்த இந்த நாளில் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.