ETV Bharat / city

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM

ஈ டிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம் இதோ.

e tv bharat Top 10 news @ 7 PM on may 23

author img

By

Published : May 23, 2021, 7:07 PM IST

என் தந்தையின் இறுதி ஊர்வலம் தான் எனக்குத் திருப்புமுனை - அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

தனது தந்தையின் இறுதி ஊர்வலம் தான் தனக்குக் கிடைத்த சிறந்த பாடமாக அமைந்தது எனவும், அதை இப்போதும் நான் மறக்கவில்லை எனவும் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தனது தந்தையார் குறித்த நினைவைப் பகிர்ந்துள்ளார்.

வளைகாப்பில் பரவிய கரோனா - கர்ப்பிணி மருத்துவர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த கார்த்திகா என்ற 8 மாத கர்ப்பிணி மருத்துவர் கரோனா தொற்றினால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை' - மா.சுப்பிரமணியன்

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்க கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிக்கை வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வீடுகள்தோறும் காய்கறிகள், பழங்கள் விநியோகம் - தொலைபேசி எண் அறிவிப்பு

முழு ஊரடங்கின்போது நாளை (மே 24) உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தினமும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணிவரை காய்கறி, பழங்கள் விநியோகிக்கப்படும் எனவும் மேற்கொண்ட தகவல்களைப் பெற இலவச அழைப்பு எண்ணும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுடன் மத்திய அரசு முரண்படுகிறது - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தடுப்பூசி விவகாரத்தில் மாநில அரசின் செயல்பாட்டில் மத்திய அரசு முரண்பட்டு செயல்படுகிறது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

ஆக்ஸிஜன் உற்பத்தியை தமிழ்நாடு அரசு உடனடியாக பெருக்க வேண்டும் - திருநாவுக்கரசர் எம்.பி.

திருச்சி: 'கரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஆக்ஸிஜன் உற்பத்தியை தமிழ்நாடு அரசு உடனடியாக பெருக்க வேண்டும். கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்' என நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறுகிறார்.

'அண்ணாந்து பார்க்க வைத்த கல்யாணம்' - விமானத்திற்குள் டும்.. டும்.. சத்தம்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வார்கள்... ஆனால் மதுரையைச் சேர்ந்த மணமக்கள் சொர்க்கத்துக்குக் கொஞ்சம் கீழே அந்தரத்தில் அதாவது விமானத்தில் திருமணத்தை நடத்தி அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறார்கள்.

சத்தியமங்கலத்தில் பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி!

சத்தியமங்கலத்தில் இருந்து வெளியூர் செல்ல குறைந்த அளவில் பேருந்துகள் இயங்குவதால் வெளியூர் செல்வதற்காகப் பயணிகள் காத்துக்கிடக்கின்றனர்.

கவனக்குறைவால் இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தானியர்கள்: மனிதாபிமான அடிப்படையில் விடுவித்த இந்தியா

கவனக்குறைவால் இந்திய எல்லைக்குள் வந்த இரண்டு பாகிஸ்தானியர்களை மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல், பாகிஸ்தான் அரசிடம் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை ஒப்படைத்துள்ளது.

மறைந்த இளவரசி டயானா நேர்காணலில் பிபிசி செய்த முறைகேடு!

1995ஆம் ஆண்டு சர்ச்சைக்குள்ளான மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் நேர்காணல் தொடர்பாக பிபிசி முறைகேட்டில் ஈடுபட்டது தற்போது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.