ETV Bharat / city

7 மணி செய்திகள் - TOP 10 NEWS @ 7 AM - இன்றைய ராசிபலன்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்...

7 மணி செய்திகள் - TOP 10 NEWS @ 7 AM
7 மணி செய்திகள் - TOP 10 NEWS @ 7 AM
author img

By

Published : Jun 22, 2021, 7:08 AM IST

முதலாவது கூட்டத்தொடரின் இரண்டாவது நாள்

தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று (ஜுன் 22) அண்மையில் மறைந்த முக்கியப் பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

’நீட் வேண்டாம் என்பதே பெரும்பாலானோர் கருத்து’ - நீதிபதி ஏ.கே. ராஜன் தகவல்

ஆணையத்திற்கு வந்துள்ள 25 ஆயிரம் கடிதங்களில், நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது என உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தெரிவித்துள்ளார்.

அனைவருக்குமான அரசு இதுவெனக் காட்டும் ஆளுநர் உரை - விசிக பாராட்டு

சட்டப்பேரவையில் ஆளுநர் நிகழ்த்திய உரையை, 'அனைவருக்குமான அரசு இதுவெனக் காட்டும் ஆளுநர் உரை' என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராட்டியுள்ளது.

சென்னையில் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த 7 நாள்களுக்கு அனுமதியில்லை

சென்னையில் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் ஏழு நாள்களுக்கு சென்னை நகருக்குள் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது எனச் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

உணவகத்தைச் சூறையாடிய கும்பல்: சிசிடிவி மூலம் விசாரணை

வேளச்சேரியிலுள்ள உணவகத்திற்குள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல் உருட்டுக் கட்டை, பீர் பாட்டில், கற்களால் உணவகத்தைச் சூறையாடிய சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

கரோனா காலத்திலும் அந்நிய முதலீட்டில் உச்சம் தொட்ட இந்தியா

இந்தியாவில் 2020ஆம் ஆண்டு அந்நிய நேரடி முதலீடானது 27% உயர்வைக் கண்டுள்ளதாக ஐ.நா.வைச் சேர்ந்த அமைப்பு ஆய்வுத் தகவலை வெளியிட்டுள்ளது.

ஒரேநாளில் 85 லட்சம் பேருக்கு தடுப்பூசி: இந்தியா உலக சாதனை!

ஒரேநாளில் 85 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தி இந்தியா உலக சாதனை செய்துள்ளது.

அமர்நாத் யாத்திரை ரத்து!

ஜம்மு காஷ்மீர் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் அறிவித்துள்ளார். முன்னதாக அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு ஏப்ரல் 22ஆம் தேதி நிறுத்தப்பட்டது.

வெற்றியோ... தோல்வியோ... சிறு சிரிப்பில் கடப்பவர்!

கடின பயணத்தில் 47ஆவது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் இளைஞர்களின் தளபதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

இன்றைய ராசிபலன் - ஜூன் 22

நேயர்களே, ஜூன் 22ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.