பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் ஒருங்கிணைந்தத் தடுப்பூசி உற்பத்தி ஆலையைத் தமிழ்நாட்டிற்கு குத்தகைக்கு வழங்க வேண்டும் என, பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சொமேட்டோ ஊழியரைப் போன்று ஆடை அணிந்து மது விற்ற நபர் கைது!
சென்னை: சொமேட்டோ ஊழியரைப் போன்று ஆடை அணிந்து மதுவை 'டோர் டெலிவரி' செய்துவந்த நபரை பிடித்த காவல்துறையினர், அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
PSSB school பாலியல் வழக்கு: ராஜகோபாலனின் நண்பர்களை விசாரிக்க முடிவு!
சென்னை கே.கே. நகர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், கைதான ஆசிரியர் ராஜகோபாலனுக்கு நெருங்கிய நண்பர்கள் யார் யார்? என்ற பட்டியலை எடுத்து, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள காவல் துறை திட்டமிட்டுள்ளது.
பருப்பு, எண்ணெய் கொள்முதல் டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி முறையீடு!
பொது விநியோகத் திட்டத்திற்காக பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிக்கு மதுரை கிளை விதித்த தடையை நீக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுத்தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
கரோனா தொற்றிலிருந்து மீண்டவர் கறுப்பு பூஞ்சையால் பலி
வேலூர்: கரோனா தொற்றிலிருந்து மீண்ட நபர், கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (மே.26) உயிரிழந்தார்.
ஊரடங்கு: வீதிகளில் உணவின்றி அல்லல்படும் விலங்குகளுக்கு உதவுங்கள்!
கரோனா ஊரடங்கு காலத்தில் வீதிகளில் உணவின்றி அல்லல்படும் விலங்குகளுக்கு உணவளிக்க பொது மக்கள் தங்களாலான நிதியை வழங்குமாறு, தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இனி தாய்மொழியில் பொறியியல் படிக்கலாம்!
சென்னை: தாய்மொழியில் பொறியியல் படிக்க, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
மயானத்தில் இருந்து வரும் புகையால் அவதி: பொதுமக்கள் சாலை மறியல்
ஆத்தூர் சாலையில் உள்ள எரிவாயு தகன மேடையிலிருந்து வரும் புகையினால் துர்நாற்றம் ஏற்படுவதாகக் கூறி பாதிப்புக்குள்ளான பொது மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வெப்பச்சலனம்: கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக இன்று (மே. 27) கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், திருநெல்வேலி, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியிலிருந்து சென்னை வந்த மருத்துவ உபகரணங்கள்!
சென்னை: டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் முகக்கவசங்கள், மருத்துவக் கருவிகள், ஆக்சிஜன் செறிவூட்டி உள்ளிட்ட 780 கிலோ மருத்துவ உபகரணங்கள் வந்தடைந்தன.