சென்னை: பசுமைவழி சாலையில் உள்ள வீட்டில் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார். இதில் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோனையில் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, "அதிமுகவில் இரட்டை தலைமையே தொடரும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை பதவியை மாற்றும் உரிமை கழக சட்டவிதிகளில் கிடையாது. ஒற்றை தலைமை கொண்டுவருவதற்கு சட்ட விதிகளில் இடம் உள்ளதாக இன்பதுரை கூறியிருக்கிறார். அவர் முதலில் வழக்கறிஞரே கிடையாது. இந்த விவகாரம் எல்லாம் சபாநாயகர் மற்றும் அமைச்சராக இருந்த ஜெயக்குமாருக்கு தெரியும்.
அப்படி எதாவது ஒற்றை தலைமை எடுப்பதற்கு வாய்ப்பு இருந்தால் நீதிதேவதையை நாட வேண்டியது இருக்கும். ஓபிஎஸ் நீண்ட ஆலோசனைக்கு பின்பே முடிவு எடுப்பார். அது தீர்க்கமாக இருக்கும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'ஒற்றைத் தலைமை வேண்டும்' - ஈபிஎஸ்ஸுக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்டச்செயலாளர்கள்!