ETV Bharat / city

தலைதூக்கும் டெங்கு...பாதுகாத்து கொள்வது எப்படி?

சென்னை: வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், டெங்கு காய்ச்சல் போன்ற வைரசிலிருந்து மக்கள் தகுந்த பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி தங்களை தற்காத்து கொள்வது அவசியம் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

fever
fever
author img

By

Published : Oct 19, 2020, 10:03 AM IST

பருவமழை காலங்களில் அனைத்து வயதினருக்கும் வைரஸ் காய்ச்சல் ஏற்படுவது இயல்பு. அவற்றில் சில வகை காய்ச்சல் ஒன்றிரண்டு நாட்களிலோ, மருத்துவரிடம் ஒருமுறை சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டாலோ குணமாகி விடும். ஆனால், ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கையை குறைத்து, உயிரிழப்பு வரை கொண்டு செல்லும் டெங்கு காய்ச்சல் போன்ற வைரஸ்கள் மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

கரோனா தொற்று சவாலையே இன்னும் எதிர்நோக்கியுள்ள நமக்கு, அதற்கு ஈடான சவால் நிறைந்த டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களிலிருந்து எவ்வாறு தற்காத்துக்கொள்வது என மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சீனிவாசன் இது தொடர்பாக பேசியபோது, ” கரோனாவால் பாதிக்கப்படும் 95 சதவீதம் குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. அதேபோல், டெங்கு காய்ச்சலால் பாதிப்போரில் 98 சதவீதம் குழந்தைகள் குணமாகின்றனர்.

கரோனா, டெங்கு இரண்டு காய்ச்சல்களுக்குமே மருந்து இல்லை. இவை இரண்டிற்கும் தேவை நோய் எதிர்ப்பு ஆற்றல்தான். எனவே, இத்தொற்றுகள் வராமல் பாதுகாத்து கொள்வதற்கான வழிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.

டெங்கு கொசுக்கள் சுத்தமான நீரில் தான் உருவாகும் என்பதால், வீட்டைச் சுற்றி நீர் தேங்காமலும், பாத்திரங்களில் நீரை பிடித்த பின் மூடாமலும் இருக்கக் கூடாது.

எந்த ஒரு கிருமியும் நம்மைத் தேடி வந்து தாக்குவது இல்லை

டெங்கு பாதித்த குழந்தைகளுக்குத் தேவையான நீர்ச்சத்து மிக்க உணவுகளை கொடுத்தால், தட்டணுக்கள் குறைவை எளிதில் சரி செய்ய முடியும். மேலும், மழைக்காலத்தில் நீரை கொதிக்க வைக்காமல் குடிப்பதால் டையேரியா, மஞ்சள் காமாலை உள்ளிட்டவையும் வரும்.

தனி மனித பாதுகாப்பு இருந்தால், எந்தவொரு கிருமியும் நம்மைத் தேடி வந்து தாக்குவது இல்லை. சுத்தமான உணவு, சுகாதாரம் ஆகியவற்றை பின்பற்றினால் நோய்த் தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் ” எனத் தெரிவித்தார்.

காய்ச்சல் ஏதும் வந்தால் மருத்துவரிடம் உடனடியாக சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை கண்காணிப்பாளர் எழிலரசி கூறும்போது, ” தமிழ்நாட்டில் தற்போது டெங்கு காய்ச்சல் அதிகரிக்கவில்லை. அவ்வாறு அதிகரித்தாலும் சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான மருத்துவ வசதிகள் அரசு மருத்துவமனைகளில் உள்ளன. பொது மக்கள் தங்களின் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மழைநீர் தேங்க விடாமலும், கொசுக்கள் உற்பத்தியாகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல் ஏதும் வந்தால் மருத்துவரிடம் உடனடியாக சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் ” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரோனா அறிகுறிகள் இருக்கும் அலுவலர்களுக்கு பரிசோதனை- தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.