ETV Bharat / city

மதுரவாயலில் மருத்துவர் தற்கொலை.. பரபரப்பு கடிதம் சிக்கியது!

சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அரசு மருத்துவர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Doctor suicide
Doctor suicide
author img

By

Published : Nov 25, 2021, 9:02 PM IST

சென்னை : சென்னை மதுரவாயல் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்வரன் (35). இவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி நந்தினி. கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் குடும்பத்தில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக கடந்த சில நாள்களாக மருத்துவர் மகேஷ்வரன் பெரும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

உள்பக்கமாக பூட்டப்பட்ட அறைக்கதவு

இந்நிலையில் நேற்று மாலை பணியை முடித்துவிட்டு ராயப்பேட்டை ஆர்.கே சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மகேஷ்வரன் அறையெடுத்து தங்கியுள்ளார்.அப்போது தனது மனைவி நந்தினியை உடன் வருமாறு அழைத்ததாகவும், அதற்கு அவரது மனைவி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் இன்று (நவ.25) காலை அவர் பணிக்கு வராததால் சக மருத்துவர்கள் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது வெகுநேரமாக அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து மகேஷ்வரின் கார் ஓட்டுனரிடம் விசாரித்துவிட்டு, தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்று பார்த்த போது மகேஷ்வரன் தங்கியிருந்த அறைக்கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால் மாற்று சாவியைப் பயன்படுத்தி திறந்துள்ளனர்.

திக் திக்.. சடலமாக கிடந்த மருத்துவர்

அப்போது அறையினுள் மருத்துவர் மகேஷ்வரன் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் ராயப்பேட்டை போலீசாருக்கும், அவரது நண்பர்களான சக மருத்துவர்களுக்கும் தகவல் அளித்தனர்.

இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவம் இடத்திற்கு சென்ற ராயப்பேட்டை காவலர்கள் சடலமாகக் கிடந்த மருத்துவர் மகேஷ்வரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மகேஷ்வரனின் கையில் ஊசி போட்ட அடையாளம், மாத்திரை, மருந்துகள் ஆகியவற்றை சிதறி கிடந்ததாகவும், தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை யாரையும் துன்புறுத்த வேண்டாம் என எழுதிய கடிதம் சிக்கியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
விஷ ஊசி செலுத்தி...
மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மருத்துவர் மகேஷ்வரனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில் உடற்கூராய்வு பரிசோதனைக்குப் பின்பே இறப்பிற்கான காரணம் குறித்து உறுதியாகத் தெரியவரும் எனவும் போலீசார் தககல் தெரிவித்துள்ளனர்.

மேலும், தனது இறப்பிற்கு யாரும் காரணமில்லை என மருத்துவர் மகேஷ்வரன் எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்.. கரூர் மாணவியின் தாய் வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.