திமுக மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவுபெரும் நிலையில், அடுத்த மாதம் வரவுள்ள தேர்தல் தொடர்பாகவும், தொகுதி பிரச்னைகள், உறுப்பினர்களின் செயல்பாடுகள் ஆகியவை பற்றி ஆலோசிப்பதற்காகவும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை கூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், கூட்டத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. சாமி, குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் காத்தவராயன் ஆகியோர் உடல்நலக் குறைவால் அடுத்தடுத்த நாள்களில் காலமாகியுள்ளது அக்கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 98 ஆக குறைந்துள்ளது.
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனும் வயது முதிர்வின் காரணமாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகிறார். இது போன்ற காரணங்களுக்காகவே திமுக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை ஒத்திவைத்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: குடியாத்தம் திமுக எம்எல்ஏ காலமானார்!