ETV Bharat / city

அடையாறு வெள்ளத் தடுப்புச்சுவர் கட்டுவதில் கோடிக்கணக்கில் முறைகேடு: திமுக ஆர்ப்பாட்டம்! - protest

சென்னை: அடையாற்றில் வெள்ளத் தடுப்புச்சுவர்கள் கட்டுவதில் கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

protest
protest
author img

By

Published : Feb 22, 2020, 2:09 PM IST

அடையாற்றில் வெள்ளத் தடுப்புச்சுவர் கட்டுவதில் முறைகேடுகள் நடப்பதாகவும், அங்கு நடக்கும் மணல் கொள்ளையைக் கண்டித்தும் சைதாப்பேட்டை ஆடு தொட்டி பாலம் அருகில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான திமுகவினரும், அப்பகுதி மக்களும் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மா. சுப்பிரமணியன், ”அடையாற்றில் வேதியியல் ரசாயனங்கள் கலப்பதாகவும், அதனை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தவும் தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகங்கள், பொதுப்பணித் துறை இதைக் கண்டுகொள்ளவில்லை. ஆதனூரில் தொடங்கி 42 கி.மீ. நீண்டுசென்று கடலில் கலக்கும் அடையாற்றின் இருபக்கங்களிலும் வெள்ளத்தடுப்புச் சுவர்கள் கட்டப்பட வேண்டும் என்று திமுக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

அதன்பிறகு அரசு இதற்காக 104 கோடி ரூபாய் ஒதுக்கி, வெறும் 875 மீட்டருக்கு சுவர் கட்ட தொடங்கியுள்ளனர். மீதியுள்ள பகுதிகளில் வெறும் மண்ணை வைத்து அணைத்துவிட்டு ஆற்றை பலப்படுத்திவிட்டதாகக் கூறுகின்றனர்.

கிராமங்களில், ஊராட்சிகளில் நடந்த மணல் கொள்ளை தற்போது சென்னையிலும் நடைபெற்று வருகிறது

இங்கு சுவர்கள் கட்டப்படுவதில் பெரும் முறைகேடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக வெள்ளத் தடுப்புச் சுவரை எம் சாண்ட் (MSAND) மணல் பயன்படுத்திதான் கட்ட வேண்டும். ஆனால், இந்த ஆற்று மணலையும், தண்ணீரையும் மட்டுமே பயன்படுத்தி கட்டிவருகின்றனர். இதனால் இந்தச்சுவர்கள் வெள்ளக்காலத்தில் மக்களைக் காப்பாற்றாது. இதற்கு ஒதுக்கப்பட்ட 104 கோடியில் 70 விழுக்காடு ஆட்சியாளர்களின் பாக்கெட்டிற்கு சென்றிருக்கிறது.

கிராமங்களில், ஊராட்சிகளில் நடந்த மணல் கொள்ளை தற்போது சென்னையிலும் நடைபெற்றுவருகிறது. இது குறித்து பொதுப்பணித் துறைச் செயலாளர் மணிவாசனிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை “ எனக் கூறினார்.

இதற்கு ஒதுக்கப்பட்ட 104 கோடியில் 70 சதவீதம் ஆட்சியாளர்களின் பாக்கெட்டிற்கு சென்றிருக்கிறது

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் தடையை மீறியதாகக் கூறி காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: சுற்றுச்சூழலுக்கேற்ற மின்சாரப் பேருந்து சேவை தமிழ்நாட்டில் அறிமுகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.