ETV Bharat / city

"ஒன்றிணைவோம் வா" - கட்சியினருக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!

சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் கட்சியினரை ஒருங்கிணைக்கும் வகையில் காணொலி ஒன்றை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

stalin
stalin
author img

By

Published : Apr 20, 2020, 7:53 PM IST

திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், ’ இன்று, நான் "ஒன்றிணைவோம் வா" எனும் முயற்சியை அறிவிக்கிறேன். இக்கட்டான சூழ்நிலையில் ஒற்றுமையே பலம்! ’- எனத் தனது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் காணொலி ஒன்றினைப் வெளியிட்டுள்ளார். அக்காணொலியில் அவர் தனது பேசியுள்ளதாவது,

” ஒட்டுமொத்த உலகமும் கரோனாவால் முடங்கியிருக்கின்ற இந்தப் பேரிடர் நேரத்தில், பாவேந்தர் பாரதிதாசனின் ’எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார். இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே’ என்ற வரிகளைத் தான் நாம் நினைக்க வேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டில், கடந்த காலத்தில் புயல், சுனாமி, வெள்ளம், தீ விபத்து, பஞ்சம் உள்ளிட்ட பலவிதமான சவால்களையும் எதிர்கொண்டு மீண்டெழுந்திருக்கிறோம். 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாத சுனாமியில் பல உயிர்களைப் பலிகொடுத்தோம். ஒரே நாளில், பல்லாயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்தன. அத்தனையையும் மீறி அவர்கள் வெகு விரைவாக இயல்பு வாழ்க்கையை நோக்கித் திரும்பியதற்குக் காரணம், ஒட்டுமொத்த தமிழகமும் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பக்கத் துணையாக இருந்து உதவிக்கரம் நீட்டியதுதான்.

"ஒன்றிணைவோம் வா" - கட்சியினருக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!

அந்தச் சுனாமியை விட ஆயிரம் மடங்கு பேராபத்துதான் இன்றைய கரோனா. கரோனாவிற்கு இன்றுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் ஒவ்வொருவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு ஊடரங்குதான் முழுமுதல் தடுப்புக் காவல்.

இன்னொரு பக்கம் ஊரடங்கினால் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பசி, பட்டினியால் துடிக்கிறார்கள். அவர்களுக்கு வேலை இல்லை. வருமானம் இல்லை. இதை நாம் வேடிக்கை பார்க்க முடியாது. ஒவ்வொரு மனிதனும் பசி பட்டினியால் வாடும் போதும் நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். முதியோர், நோயால் பாதிக்கப்பட்ட மக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கும் நிச்சயம் உதவ வேண்டும்.

ஆட்சியிலிருந்தாலும் இல்லை என்றாலும் தி.மு.க. காப்பாற்றும்' என்ற நம்பிக்கையை மக்களுக்குக் கொடுத்திருக்கும் உங்களை ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைக்கின்ற முயற்சிதான் - 'ஒன்றிணைவோம் வா'. அடுத்து வரும் சில வார காலத்துக்கு நாம் ஒன்றிணைந்து ஏழைகளுக்குப் பசியாற்றும் பெரும்பணியைச் செய்தாக வேண்டும்.

எங்காவது சிரமங்கள், தொல்லைகள், நெருக்கடிகள் ஏற்பட்டால் அவர்கள் உடனடியாக எனது அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

கட்சியினர் ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இணைப்பு பாலமாகவும் பக்கபலமாகவும் இருந்து, அவர்கள் இந்தப் பேரிடரிலிருந்து மீள்வதற்கான வலிமையைத் தரும் வகையில் செயல்படுங்கள் “ - என உரையாற்றியுள்ளார்.

இதையும் படிங்க: கரோனா உயிரிழப்பு - உடல்கள் தகனம் செய்வதை தடுக்க வேண்டாம் என வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.