ETV Bharat / city

நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! - திமுக

சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை காலை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளது.

office
office
author img

By

Published : May 15, 2020, 2:58 PM IST

கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 50 நாள்கள் கடந்துள்ள நிலையில், கரோனாவின் வீரியம் குறையாத காரணத்தால் நான்காவது முறையாக நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளது. இந்நிலையில், ஊரடங்கால் மக்கள் படும் இன்னல்கள் குறித்தும், அரசுகளின் நடவடிக்கைகள் குறித்தும், அதனடிப்படையில் திமுக ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்க அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இக்கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் திமுகவின் ’ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் அடிப்படையில் பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டும், அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டும் வருகின்றன. இதனிடையே, அக்கோரிக்கை மனுக்களை அரசிடம் கொடுக்கச் சென்றபோது நடந்தவை குறித்து, திமுகவிற்கும், தலைமைச் செயலாளருக்கும் அறிக்கை போர் வேறு நடந்து வருகிறது. இதுகுறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

மேலும், கரோனா விவகாரத்தில் அரசின் மீது திமுகவின் குற்றச்சாட்டுகள் பற்றியும், ரேபிட் கருவிகள் கொள்முதல் தொடர்பாகவும், நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்தும் நாளையக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, நாளை நடைபெற உள்ள மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: பேரிடர் நேரத்திலும் பாலிடிக்ஸ் செய்ய வேண்டாம் - மத்திய அரசுக்கு ஸ்டாலின் அட்வைஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.