வெறி நாய்க்கடி நோய் இல்லா மாநகரம் என்ற இலக்கை முன் வைத்து, சென்னை மாநகரின் அனைத்து மண்டலங்களிலும் வெறி நாய்க்கடி நோய்த் தடுப்பூசி போடுதல் மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்குதல் பணிகள் மாநகராட்சி நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக,
- மாதவரம் மண்டலத்தில் 8,846 நாய்களுக்கும்
- ஆலந்தூர் மண்டலத்தில் 3,674 நாய்களுக்கும்
- அம்பத்தூர் மண்டலத்தில் 8,243 நாய்களுக்கும்
- சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 4,461 நாய்களுக்கும்
- வளசரவாக்கம் மண்டலத்தில் 5,869 நாய்களுக்கும்
- அண்ணாநகர் மண்டலத்தில் 3,346 நாய்களுக்கும்
- அடையாறு மண்டலத்தில் 4,186 நாய்களுக்கும்
- மணலி மாவட்டத்தில் 3,551 நாய்களுக்கும்
- பெருங்குடி மண்டலத்தில் 4,598 நாய்களுக்கும்
- திரு.வி.க நகர் மண்டலத்தில் 3,835 நாய்களுக்கும்
- ராயபுரம் மண்டலத்தில் 2,759 நாய்களுக்கும்
தொடர்ந்து திருவெற்றியூர், கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட அனைத்து மண்டலங்களிலும் நாய்களுக்கு நோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் ஊசிகள் போடப்பட்டுள்ளன.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட போது பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு தாங்களாகவே முன் வந்து நோய்த்தடுப்பு ஊசிகளை போட்டுக்கொண்டனர். மேலும், இத்திட்டத்தின் மூலம் வெறி நாய்க்கடி நோய்களிலிருந்தும், ஒட்டுண்ணி நோய்களிலிருந்தும் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காதலி சொன்னதுபோல் வராத ஆத்திரம் - போலீஸ் பூத் மீது குண்டு வீசிய காதலன் கைது!