சென்னை: தமிழ்நாட்டில் பண்டிகை நாள்களின் போது அரசு அலுவலகங்களில் பரிசுத்தொகை, பரிசு பொருள்கள் லஞ்சமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் பண்டிகை நாள்களுக்கு முன் லஞ்ச ஒழிப்புத் துறையினர், அரசு அலுவலகங்களில் சோதனை நடத்துவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று (அக்.30) தமிழ்நாட்டின் 33 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.
லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
சேலம், மதுரை, காஞ்சிபுரம் உள்பட தமிழ்நாடு முழுவதும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, டாஸ்மாக், போக்குவரத்து அலுவலகம், மின்சார அலுவலகம் , முனிசிபாலிட்டி அலுவலகம் உள்ளிட்ட 14 துறைகளைச் சார்ந்த 33 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் கணக்கில் காட்டப்படாத 18 லட்சத்து 20ஆயிரத்து 30 ரூபாய் பணம், 6 லட்சத்து 47ஆயிரத்து 180 ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள், 36 ஆயிரம் மதிப்பிலான பட்டாசு பெட்டிகள் உள்ளிட்டவற்றை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: சோதனைச் சாவடியில் லஞ்சம் வாங்கிய காவலர் பணியிடை நீக்கம்