சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் நள்ளிரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கிழக்கு மத்திய வங்கக்கடலில் நேற்று முன்தினம்(செப். 24) காற்றழுத்த தாழ்வு உருவானது. இது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று உருமாறியது.
வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி மேற்கு திசை நோக்கி நகர்ந்தது.
இந்தப் புயல் இன்று மாலை ஆந்திரப் பிரதேசம், ஒடிசா இடையேயுள்ள கலிங்கப்பட்டினத்தில் கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், குலாப் புயல் கரையைக் கடக்கும்போது, 75-85 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும், இதன்காரணமாக வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழ்நாட்டில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்காவை புரட்டிப் போட்ட ஐடா புயல்... புகைப்படங்கள் உள்ளே!