சென்னை: கரோனோ தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. 15 மண்டலங்களில் தலா மூன்று குழுக்கள் வாரியாக பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், திரையரங்கம், கடைகள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குழுவிலும் மாநகராட்சி, காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு இந்த குழு அபராதம் விதித்து வருகிறது.
அதன்படி, கடந்த 31ஆம் தேதி முதல் நேற்று (ஜனவரி 5) வரை 5997 பேரிடமிருந்து ரூ. 12.59 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாத 2286 பேரிடம் ரூ. 4. 83 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
இதையும் படிங்க: குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரியில் 67 பேருக்கு கரோனா!