ETV Bharat / city

எஸ்.பி.வேலுமணி விவகாரம்: லஞ்ச ஒழிப்புத்துறையினரின் வளையத்தில் சிக்கும் முக்கியப்புள்ளிகள்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அமைச்சராகப் பணியாற்றிய காலகட்டத்தில் விதிகளை மீறி, ஒப்பந்தம் செய்த அரசு ஒப்பந்ததாரர்களின் பட்டியலை தயாரித்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

எஸ்பி வேலுமணி
எஸ்பி வேலுமணி
author img

By

Published : Aug 16, 2021, 11:00 PM IST

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்குச் சொந்தமான 60-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் கடந்த வாரம் அதிரடியாக சோதனை நடத்தினர்.

குறிப்பாக, சென்னை, கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் 811 கோடி ரூபாய் டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தியது.

இந்தச் சோதனையின்போது 13.50 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணமும், 2 கோடி ரூபாய் வைப்புத் தொகை தொடர்பான ஆவணங்களும், மாநகராட்சி ஒப்பந்தம் தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கின. மேலும் எஸ்.பி. வேலுமணி தொடர்பான வங்கிக் கணக்குகள், வங்கி லாக்கர்கள் தொடர்பாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆய்வை மேற்கொண்டு வந்தனர்.

எதன் அடிப்படையில் பட்டியல்

இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், குறிப்பாக 2014 முதல் 2018ஆம் ஆண்டுவரை நடந்த சென்னை, கோயம்புத்தூர் மாநகராட்சிகள் தொடர்பான டெண்டர்களில் விதிகளை மீறி ஒப்பந்தம் செய்த அரசு ஒப்பந்ததாரர்களின் பட்டியலை லஞ்ச ஒழிப்புத் துறை தயாரித்துள்ளது.

சோதனையின்போது கிடைக்கப்பெற்ற மாநகராட்சி ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் மூலம் இந்தப் பட்டியலைத் தயாரித்து உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில், சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும் மாநகராட்சி ஒப்பந்ததாரருமான வெற்றிவேல் என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இவர் அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் துணைச் செயலாளராக இருந்து வருகிறார். மேலும் இவர் முன்னாள் அமைச்சர் வளர்மதியின் உதவியாளரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிவேலிடம் விசாரணை

மாநகராட்சி டெண்டரில் எத்தனை ஒப்பந்தங்களை வெற்றிவேல் எடுத்துள்ளார், அதில் விதிகளை மீறி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளாரா உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

முக்கியமாக 346 கோடி ரூபாய் டெண்டரில் வெற்றிவேலின் ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்களை வைத்து விசாரணை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையினால் எஸ்.பி. வேலுமணி மூலமாக விதிகளை மீறி ஒப்பந்தங்கள் பெற்ற அரசு ஒப்பந்ததாரர்கள் அச்சத்தில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: எஸ்பி வேலுமணி வீட்டில் சோதனை நிறைவு - லாக்கர் சாவியை எடுத்துச்சென்ற போலீசார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.