சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.
விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த தந்தை மகன் இருவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது 15 வயது சிறுவன் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
உடனே விமான நிலைய மருத்துவக் குழு, தந்தையுடன் சிறுவனை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: மகளிர் தினம் - ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய பெண் விமானிகள்!